பிரேசில் நாட்டில் இருந்து பிரான்சு நாட்டுக்கு 228 பயணிகளுடன் சென்றஏர் பிரான்ஸ் விமானம் கடந்த திங்கட்கிழமை அட்லாண்டிக்கடலில் விழுந்தது. இந்த விமானம் விழுந்த இடத்தை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது. 5 நாட்கள் தேடலுக்கு பிறகு நேற்று தான் விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன
பிரேசில் நாட்டில் இருந்து 800 கிலோ மீட்டருக்கு வட கிழக்கே விமானத்தின் பாகங்கள் மிதந்தன. விமானத் தில் பயணம் செய்த 2 பய ணிகள் உடல்களும் சிக்கின. அவற்றை பிரேசில் நாட்டு கடற்படையினர் மீட்டனர். கடலில் ஒரு பை மிதந்தது. அதில் விமான டிக்கெட் மற்றும் லேப்-டாப் கம்ப்யூட் டர் ஆகியவை இருந்தன.
விமானம் விழுந்த இடம் துல்லியமாக தெரிந்து விட்ட தால் அந்த இடத் துக்கு கூடுதல் கப்பல்கள் அனுப்பப்பட்டு உள்ளன. அந்த இடம் முழு வதையும் சுற்றி வளைத்து தேடுகிறார்கள். பிரேசில், பிரான்சு நாட்டு விமானங் களும் தொடர்ந்து தேடி வருகின்றன
கடலுக்கு அடியில் கிடக்கும் பொருட்களை கண்டு பிடிக்க பிரான்சு கடற்படை நீர்மூழ்கி படகுகளும் அனுப்பப்பட்டு உள் ளன. அவை கடலுக்குள் சென்று தேட உள்ளன. அப்போது விமானம் மூழ்கி கிடப்பதை கண்டு பிடித்து விடலாம் என நினைக்கிறார்கள்.
இதற்கிடையே விமான விபத்துக்கு விமான வேக கட்டுப்பாட்டு கருவியே காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது. பிரான்சு விமானங்களில் உள்ள வேக கட்டுப்பாட்டு கருவிகள் பழமையானது. இதில் பனிக் கட்டி படர்ந்து கருவியை பாதிக்க செய்து இருப்பதை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கண்டு பிடித்தனர். எனவே பழைய வேக கட்டுப்பாட்டு கருவிகளை மாற்ற முடிவு செய்து ஒவ் வொரு விமானமாக மாற்றி வந்தனர்.
விபத்துக்குள்ளான விமானத்தில் அந்தகருவி மாற்றப்படாமலே இருந்தது. எனவே பனிபடர்ந்து அந்தகருவி பழுதாகி இருக்கலாம். எனவே வேகத்தை பைலட்டுகளால் கணிக்க முடியாமல் இருந்து விபத்து நேர்ந்து இருக்கலாம் என கருதப்படுகிறது.
எனவே அனைத்து விமா னங்களிலும் வேககட்டுப்பாட்டு கருவியை மாற்றும் பணி விரைவாக நடந்து வருகிறது.
புகைப்பட உதவி : அதிரை எக்ஸ்பிரஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக