துபாயில் அமீரக காயிதெமில்லத் பேரவையின் சார்பில் மதுரை மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் மற்றும் முதுவைக் கவிஞர் ஆகியோருக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது
துபாயில் அமீரக காயிதெமில்லத் பேரவையின் சார்பில் மதுரை மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பி.கே.என். அப்துல் காதிர் மற்றும் முதுகுளத்தூர் திடல் பள்ளிவாசல் ஜமாஅத் தலைவர் முதுவைக் கவிஞர் மௌலவி ஏ. உமர் ஜஹ்பர் ஆகியோருக்கு வரவேற்பு நிகழ்ச்சி தமிழ் உணவக காயிதெமில்லத் அரங்கில் நடைபெற்றது
நிகழ்ச்சிக்கு பேரவையின் பொதுச்செயலாளர் ஏ. லியாக்கத் அலி தலைமை வகித்தார்.
இணைச் செயலாளர் கீழக்கரை ஹமீதுர் ரஹ்மான் வரவேற்றார். பொருளாளர் எம். அப்துல் கத்தீம் சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்
ஏற்புரை நிகழ்த்திய மதுரை மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் அமீரக காயிதெமில்லத் பேரவையின் பணிகளைப் பாராட்டினார். காயிதெமில்லத் அவர்கள் மேற்கொண்ட அரசியல் பணிகளை தங்குதடையின்றி தொடர வேண்டும் என்றார்
முதுவைக் கவிஞர் ஏ. உமர் ஜஹ்பர் ஆலிம் மன்பயீ அவர்கள் காயிதெமில்லத் அவர்கள் மறைந்த பொழுது துக்ளக் வார இதழ் அரசியல் கண்ணியம் மறைந்தது என கருப்பு அட்டையுடன் வெளிவந்ததை நினைவு கூர்ந்தார்.
சகோதர சமுதாயத்தினரும் பெருமைப்படக்கூடிய வகையில் கண்ணியத்திற்குரிய காயிதெமில்லத் அவர்களின் செயல்பாடுகள் இருந்ததை நினைவு கூர்ந்தார். அத்தகைய ஒரு நிலைமை தொடர வேண்டும் என வாழ்த்தினார்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் பொதுச்செயலாளர் ( பொறுப்பு ) கே.ஏ.எம்.முஹம்மது அபுபக்கரை நியமித்த தலைவர் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் அவர்கள் நன்றி தெரிவிப்பது மற்றும் புதிய பொதுச்செயலாளர் பொறுப்பு வகிக்கும் காயல் கே.ஏ.எம். முஹம்மது அபுபக்கருக்கு பாராட்டு தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
இணைச்செயலாளர் கீழக்கரை ஹமீது யாசின் நன்றி தெரிவித்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அமீரக காயிதெமில்லத் பேரவையின் ஊடகத்துறை பொறுப்பாளர் முதுகுளத்தூர் முஹம்மது ஹிதாயத்துல்லாஹ் செய்திருந்தார்.
நிகழ்ச்சியில் முதுவை அஹ்மத் இம்தாதுல்லாஹ், ரசீன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக