திங்கள், 1 ஜூன், 2009

நெல்லையில் 4 மையங்களில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.இ. நுழைவுத் தேர்வு

திருநெல்வேலியில் 4 மையங்களில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.இ. பொது நுழைவுத் தேர்வுகள் நடைபெற்றன.

2009-2010 கல்வியாண்டிற்கான எம்.பி.ஏ. எம்.சி.ஏ., எம்.இ. பொது நுழைவுத் தேர்வுகள் திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரி, வண்ணார்பேட்டை பிரான்சிஸ் பொறியியல் கல்லூரி, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, ம.தி.தா. இந்துக் கல்லூரி ஆகிய 4 மையங்களில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

எம்.பி.ஏ. தேர்வை 2,550 பேரும், எம்.சி.ஏ. தேர்வை 799 பேரும் முதல் நாளில் எழுதினர். இரண்டாம் நாள் எம்.இ. தேர்வை 1,600 பேர் எழுதினர்.

சென்னை அண்ணா பல்கலைக் கழக ஒருங்கிணைப்பாளர் முனைவர் வைதேகி, திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரி முதல்வர் கே. ராஜகோபால் ஆகிய மேற்பார்வையில் தேர்வு நடைபெற்றது.

தேர்வுதாள்கள் பலத்த பாதுகாப்புடன் சென்னை அண்ணா பல்கலைக் கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin