தமிழகத்தில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு கடந்த 30-ந்தேதி நடந்தறது. சுமார் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த தேர்வு எழுதினர்.
இந்த படிப்புகளில் சேர விருப்புபவர்களுக்கான விண்ணப்ப வினியோகம் குறித்து தொழில் நுட்ப கல்வி ஆணையாளர் ஜெயக்கொடி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அரசு உதவி பெறும் மற்றும்தனியார் என்ஜினீயரிங்கல்லூரிகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில் சேர்வதற்கும், இந்த படிப்புகளை தனியாக வழங்கும் கல்வி நிறுவனங்களில்சேர்வதற்கும் வருகிற 11-ந்தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படும்.
தமிழகத்தில் 37 மையங்களில் விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படும்.
விண்ணப்பத்தின் விலை ரூ.300 (எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு ரூ.150).
விண்ணப்ப கட்டணத்தை செயலாளர், தமிழ்நாடு எம்.பி.ஏ., எம்.சி.ஏ., மாணவர் சேர்க்கை 2009, ஜி.சி.டி, கோவை” என்ற பெயரில் கோவையில் மாற்றத்தக்க வகையில் டி.டி. மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பத்தை தபாலில் பெற டி.டி. எடுக்கும் முகவரிக்கு கடிதம் எழுதி அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களை பெறவும், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கும் ஜூன் 30-ந்தேதி கடைசி நாள்.
இந்த படிப்புகளுக்கான கல்லூரிகள் குறித்த விபரங்கள் அடங்கிய தகவல் கையேடு ரூ.75க்கு விண்ணப்ப வினியோக மையங்களில் கிடைக்கும்.
இதற்கான விண்ணப்பங்கள் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் வினியோகிக்கப்படும் மையங்கள் விபரம் வருமாறு:-
நெல்லை அரசு என்ஜினீரியங் கல்லூரி, பாளை. செயிண்ட் சேவியர் கல்லூரி.
தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரி.
குமரி மாவட்டம் எஸ்.டி. இந்து கல்லூரி.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக