வியாழன், 7 மே, 2009

தூத்துக்குடி செலவுக்கு பணம் கேட்டு கட்சி தலைமைக்கு அ.தி.மு.க.,வினர் தந்தி

தூத்துக்குடி :தேர்தல் செலவுக்குப் பணம் கேட்டு தூத்துக்குடி அ.தி.மு.க., நிர்வாகிகள் கட்சித்தலைமைக்குத் தந்தி அனுப்பி வருகின்றனர்.தூத்துக்குடி லோக்சபா தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் சிந்தியா பாண்டியன், தி.மு.க., சார்பில் எஸ். ஆர்.ஜெயதுரை, தே.மு.தி.க., சார் பில் எம்.எஸ்.சுந்தர் உட்பட 15 பேர் போட்டியிடுகின்றனர்.

தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஒட்டப்பிடாரம்(தனி), கோவில்பட்டி, விளாத்திகுளம் ஆகிய ஆறு சட்டசபைத் தொகுதிகளில் தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டத்தில் கோஷ்டிப் பூசல் காரணமாக அ.தி.மு.க.,வினர் பிரசாரப் பணியில் சுணக்கம் காட்டி வருகின்றனர். மாவட்டச் செயலர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., ஆதரவாளர்களுக்கும் - முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் ஆதரவாளர்களுக்கும் நடந்து வரும் பனிப்போரே அதற்குக் காரணம்.தூத்துக்குடி சட்டசபைத் தொகுதியைப் பொறுத்தவரை வேட்பாளர் தரப்பிலிருந்து ஓட்டுச்சாவடி அமைப்பது உள்ளிட்ட பணிகளுக்காக பணம் தரவில்லையெனப் புகார் கூறி கட்சி நிர்வாகிகள் தலைமைக்கு தொடர்ந்து தந்தி அனுப்பி வருகின்றனர்.அ.தி.மு.க., நிர்வாகி கூறுகையில், 'கட்சி தலைமையிலிருந்து வேட்பா ளருக்குப் பணம் தரப்பட்டுள்ளது.

ஆனால், அவரது ஆதரவாளர்கள் தேர்தல் பணிக்கு அப்பணத்தைப் பிரித்துத்தர தயங்குகின்றனர். இப்படியே போனால் தூத்துக்குடி லோக்சபா தொகுதியில் அ.தி.மு.க, வெற்றி கனவாக மாறிவிடும். எனவே, உரிய பணத்தை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென' புலம்பித் தள்ளினார்.ஆனால், வேட்பாளர் தரப்பினரோ, 'தேர்தல் செலவுக்குப் பணம் கொடுப்பது உள்ளிட்ட எல்லா பணிகளும் முறையாகத்தான் நடந்து வருகிறது' என்றனர்.

தகவல் : தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin