முதுநிலை பொறியியல் படிப்பில், இந்த ஆண்டு முதல் புதிதாக 3 பட்டப் படிப்புகளை தொடங்க அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.
கடந்த அண்டு பொறியியல் பட்டப் படிப்புகளில் 1.35 லட்சம் இடங்களுக்கான சேர்க்கையில், 1.25 லட்சம் இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டன. 10,000 இடங்கள் காலியாக இருந்தன.இந்த ஆண்டு 1.60 லட்சம் இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இதில் குறைந்தபட்சம் 7 ஆயிரம் இடங்கள் காலியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதற்குக் காரணமே, மாணவர்கள் விரும்பிய படிப்பும், விரும்பும் கல்லூரியும் கிடைக்காமல் போவதுதான். இந்நிலையில், இந்த ஆண்டு 140 புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளன. அதேபோல், புதியதாக 3 முதுநிலை படிப்புகளை தொடங்க, அண்ணா பல்கலைக்கழகமும் திட்டமிட்டுள்ளது. இளநிலை பொறியியலில் ஏற்கனவே 41 பட்டப் படிப்புகள் நடத்தப்படுகின்றன. முதுநிலை படிப்புகள் 69 உள்ளன.
இந்த ஆண்டு எம்.இ (விண்வெளி தொழில்நுட்பம்), எம்.பி.ஏ (மருத்துவமனை நிர்வாகம்), எம்.ஆர்க் (அட்வான்ஸ் ஆர்க்கிடெக்சர்) ஆகிய புதிய முதுநிலை பட்டப்படிப்புகளை, அண்ணா பல்கலைக்கழகம் தொடங்க உள்ளது. அதேபோல், இளநிலை பொறியியல் படிப்பில் ஒன்றிரண்டு படிப்புகளையும் புதியதாக தொடங்க திட்டமிட்டுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக