நடிகர் கமல்ஹாசனின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது
ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்த கமல் வாக்களிப்பதற்காக நேற்று மாலை அவசரமாக சென்னை புறப்பட்டு வந்தார். இந்நிலையில் அவர் தனது பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதை அறிந்து வருத்தம் தெரிவித்துள்ளார்
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
''நான் வாக்களிப்பது தடைபடுவது இதுவே முதல்முறை ஆகும். இதற்காக எனது படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு புறப்பட்டு வந்தேன். இதனால் எனக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பு.
ஒவ்வொரு சாதாரண குடிமகனும் வாக்களிக்க வேண்டும் என்பது ஜனநாயகக் கடமை. ஆனால், எனது ஓட்டுரிமை பாதிக்கப்பட்டுள்ளது வருத்தம் அளிக்கிறது.
இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளேன். நான் சென்னை முகவரியில் தான் வருமான வரி செலுத்தி வருகிறேன். மின் கட்டணமும் இதே முகவரியில் தான் செலுத்துகிறேன்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் லஸ் பகுதியில் உள்ள மாநகராட்சிப் பள்ளயில் தான் வாக்களித்தேன். இந்நிலையில், எனது பெயர் எப்படி நீக்கப்பட்டது என்பது தெரியவில்லை'' என்றார்.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையரும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ராஜேஷ் லக்கானி கூறுகையில், ''லஸ் சர்ச் சாலையில் உள்ள அவரது வீடு கிடங்காக பயன்படுத்த வாடகைக்கு விடப்பட்டுள்ளது. கமல் முக்கிய பிரமுகர்கள் பட்டியலில் உள்ளார். எனினும், 2 ஆண்டுகளுக்கு முன்னரே அவரது பெயர் நீக்கப்பட்டுவிட்டது. எங்களது ஆவணங்களின்படி அவர் சென்னையில் வசிக்கவில்லை.
கொடுக்கப்பட்ட முகவரியில் ஒருவர் வசிக்கவில்லை என்ற சூழ்நிலையில் இந்த விவகாரத்தில் நாங்கள் எதுவும் செய்யமுடியாத நிலையில் இருக்கிறோம்'' என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக