திங்கள், 11 மே, 2009

பொள்ளாச்சி அருகே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்-தமுமுக தொண்டர்கள் மோதல்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கும் தமுமுகவைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இதில் 11 பேர் காயமடைந்தனர். இதையடுத்து அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது.

பொள்ளாச்சி அருகே சூளேஸ்வரன் பட்டியில் திமுக வேட்பாளர் சண்முக சுந்திரத்திற்கு ஆதரவாக தவ்ஹீத் ஜமாத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் வேனில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது அதே பகுதியில் மனித நேய மக்கள் கட்சிக்கு ஆதரவாக தமுமுகவினர் பிரசாரம் செய்து வந்தனர்.

இந்நிலையில் எதிர்பாராத விதமாக தவ்ஹீத் ஜமாத் அமைப்பினருக்கும், தமுமுகவினருக்கும் இடையே வாக்கு வாதம் முற்றி மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் இரு தரப்பையும் சேர்ந்த 11 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதனால் அப்பகுதியில் பதட்டம் நிலவுகின்றது. போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

தகவல் : தட்ஸ்தமிழ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin