வியாழன், 7 மே, 2009

ஓட்டு போட விருப்பம் இல்லையா? வாக்காளர்கள் பதிவு செய்யலாம்


தொகுதி வேட்பாளர்கள் யாரும் பிடிக்கவில்லை என்ற முடிவுக்கு வரும் வாக்காளர்கள் வாக்குக் சாவடிக்குச் சென்று ஓட்டுபோடாமல் இருக்க தனக்கு கொடுக்கப்பட்டுள்ள உரிமையை பயன்படுத்தலாம்.

இதற்கான 49-0 எனும் பாரத்தை வாக்குச்சாவடிகளில் வாங்கி அதை நிரப்பி வாக்குச்சாவடி அதிகாரிகளிடம் ஒப்படைக்கவேண்டும்.

வாக்களிக்காமல் இருக்கும் உரிமையை சட்டம் வாக்காளர்களுக்கு வழங்குகிறது. ஆனால் அந்த உரிமையை பதிவு செய்யும் வசதி வாக்குப் பதிவு எந்திரத்தில் இல்லை. எனவே 49-0 பாரத்தை கேட்டுப் பெறவேண்டும் என தில்லி தலைமை தேர்தல் அதிகாரி ஜே.கே.சர்மா தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: தொகுதி வேட்பாளர்கள் மீது அதிருப்தி என்றால் அதற்காக வீட்டிலேயே தங்கிவிட வேண்டாம். வாக்களிக்காமல் இருக்கவும் நமக்கு உரிமை கொடுக்கப்பட்டுள்ளது. அந்த உரிமையை பயன்படுத்திக்கொள்ள பாரம் 49-0ஐ நிரப்பிக் கொடுக்கவேண்டும். இத்தகைய பாரத்தை வாக்காளர்கள் கேட்டால் கொடுக்கும்படி சாவடி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம்.
தில்லியில் இந்த தேர்தலில் எத்தனை பேர் இந்த பாரத்தை கேட்கிறார்கள் என்பது பற்றிய விவரத்தை திரட்ட திட்டமிட்டுள்ளோம்.

1961ம் ஆண்டின் தேர்தல் நடத்தை விதியின்படி வாக்களிக்க விருப்பம் இல்லாத வாக்காளர்கள் அதை பதிவு செய்யலாம். அவர்கள் கருத்து பாரம் 17ஏ-ல் பதிவு செய்யப்பட்டு அதில் வாக்காளர்களின் கையெழுத்து அல்லது விரல் ரேகை பெறப்படும்.

வாக்களிக்க விருப்பம் இல்லாதவர்கள் எண்ணிக்கையானது வெற்றி பெற்ற வேட்பாளருக்கும் அடுத்த இடத்தை பிடித்த வேட்பாளருக்கும் இடையேயான வாக்கு வித்தியாசத்தை விட அதிகமாக இருந்தாலும் தேர்தல் செல்லாததாக ஆகாது என்றார் சர்மா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin