இணையதளத்தில் வேலைக்கு விண்ணப்பிப்போரின் முழு விவரங்கள் அடங்கிய பயோடேட்டாவை நிறுவனங்கள் பார்வையிட்டால் அதன் அடிப்படையில் பணம் வழங்கப்படும்.
ஸ்ரீப்ண்ஸ்ரீந்த்ர்க்ஷள்.ஸ்ரீர்ம் எனும் இணையதளம் இந்த திட்டத்தை அறிவித்துள்ளது. இது பாரத் மேட்ரிமோனியல் நிறுவனத்தின் அங்கமாகும். ஒரு நிறுவனம் தங்களிடம் உள்ள வேலை வாய்ப்புகளை இந்த இணையதளத்தில் இலவசமாக பதிவு செய்யலாம்.
இதில் வேலை தேடுவோரின் பயோடேட்டாவும் பதிவு செய்யப்பட்டிருக்கும். ஏற்கெனவே இந்த இணையதளத்தில் பதிவு செய்தவர்களின் பயோடேட்டாவை ஒரு குறிப்பிட்ட நிறுவனம் பார்வையிட்டு, அதில் யாரையாவது வேலைக்காக தொடர்பு கொண்டால், அந்த நிறுவனத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட அளவு பணம் கிளிக் ஜாப்ஸ் எனும் இணையதளத்துக்கு சென்று சேரும்.
அதிலிருந்து 50 சதவீதம் பணம் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரரை சென்று சேரும். நம் நண்பர்கள் யாருக்காவது இந்த இணையதளத்தை பரிந்துரை செய்து அந்த நண்பர் விண்ணப்பித்தால் 10 சதவீதம், நண்பரின் பயோடேட்டா நிறுவனங்களால் பார்வையிடப்பட்டால் 5 சதவீதம் பணம் கொடுக்கப்படும். இவ்வாறு கொடுக்கப்படும் பணத்தில் ஒரு பகுதியை தொண்டு நிறுவனத்துக்கு நன்கொடை வழங்கும் திட்டமும் அந்த இணையதளத்தில் உள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக