திங்கள், 18 மே, 2009

குவைத்தில் முதன் முதலாக 4 பெண்கள் எம்.பி.க்களாக தேர்வு

குவைத் பாராளுமன்றம் 50 எம்.பிக்களை கொண்டது. இதை அந்நாட்டு அரசர் ஷேக்ஷபா அல்- அகமது அல்- ஷாபா கலைத்தார். இது போன்று 3 வருடத்தில் 3 முறை பாராளுமன்றம் கலைக்கப்பட்டது.

இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதை தொடர்ந்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இங்கு தேர்தல் நடத்தப்பட்டது.

இதில் குவைத் வரலாற்றிலேயே முதன் முதலாக 4 பெண்கள் எம்.பி.க்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ரோலாதஷ்டி, சல்வா அல்- ஜஸ்சார், அசீல்அல்- அவாடி, மசுமா அல்- முபாரக் ஆகிய 4 பெண்கள் எம்.பி.க்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் ரோலா தஷ்டி அமெரிக்காவில் படித்த பொருளாதார நிபுணர், சல்வா அல்- ஜஸ்சார், அஜிஸ் அல்-அவாடி ஆகியோர் பேராசிரியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும் குவிந்த வண்ணம் உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin