துபாயில் சமீபநாட்களாக நூதனமான முறையில் திருடர்கள் உலா வருகிறார்கள்…சிலருக்கு கைபேசியில் தொடர்புக் கொண்டு துபாய் டெலிகம்யூனிக்கேசனிலிருந்து (இட்டிசலாட்)பேசுவதாகக்கூறி நம் சிம் கார்டில் உள்ள PUK நம்பரை கூறி சோதிக்க சொல்வார்கள்…அவர்கள் சொல்லக்கூடிய நம்பர் சரியாக இருக்கும்.
பின்னர் நமக்கு ஒருலட்சம் திரஹம் பரிசு விழுந்திருக்கிறது இதைப் பெறுவதற்கு ஏதாவது ஒரு வங்கிப் பெயரைச் சொல்லி அங்கு வரச் சொல்லி ஒருநேரத்தை கூறுவார்கள். நாமும் உண்மையென நம்புவோம்..பின் துபாய் இட்டிசலாட் டெலிபோன் ரீசார்ஜ் கார்ட் 1000 திரஹகத்துக்கு வாங்க சொல்லி அதன் இரகசிய எண்ணை கேட்பார்கள்…நாம் கொடுத்தவுடன் அவ்வளவுதான் …நம்முடைய 1000 திரஹகம் அபேஸ்…!
இப்படி நூதனமுறையில் ஏமாற்றப்பட்டு பலர் ஏமாந்து வருகிறார்கள்…ஆதலால் துபாய் வாழ் தமிழர்களே…உசாராக இருங்கள்!
தகவலுக்கு நன்றி : கிளியனூர் இஸ்மத்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக