ஸ்ரீவை மக்களை பற்றியும் ஊர் நடப்புகளையும் தெரிந்து கொள்ளலாம்,உங்களுடைய கருத்துகளையும் பதிவு செய்யலாம்..
சனி, 18 ஏப்ரல், 2009
மனித நேய கட்சி-களமிறங்கும் குவைத் தமுமுக
மனித நேய மக்கள் கட்சியின் சார்பில் தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக, குவைத்தில் உள்ள தமிழர்களிடம் வாக்கு சேகரிக்க களம் இறங்கியுள்ளது குவைத் பிரிவு தமுமுக.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் சமீபத்தில் மனித நேய மக்கள் கட்சி துவக்கப்பட்டது. இக்கட்சி வரும் பாராளுமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து களம் இறங்க ஆர்வம் காட்டியது.
ஆனால் இரு தொகுதிகள் ஒதுக்க கோரியதால் திமுக கூட்டணியில் இடம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இதே போல் அதிமுக கூட்டணியிலும் சேரமுடியாத நிலையில் மனித நேய மக்கள் கட்சி, புதிய தமிழகம், இந்திய தேசிய லீக், ஆகியவை இணைந்து ஜனாநாயக முண்ணனி என்ற புதிய அணியை உருவாக்கியுள்ளன.
இந்தப் புதிய அணி நிச்சயம் வாக்குகளைப் பிரிக்கும் என்பதால் திமுக, அதிமுக ஆகியவை சற்றே கவலையுடன் கவனித்து வருகின்றன.
மனித நேய மக்கள் கட்சி சார்பில் மயிலாடுதுறையில் ஜவாஹிருல்லா, மத்திய சென்னையில் ஐஹதர் அலி, பொள்ளாச்சியில் கோவை உமர், ராமநாதபுரத்தில் கலிமுல்லாகான், போட்டியிடுகின்றனர்.தூத்துக்குடி, விருதுநகர், தென்காசியில் புதிய தமிழகம் போட்டியிடுகிறது.
கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தென்காசியில் போட்டியிடுகிறார்.திருச்சி, தஞ்சை, கோவையில் இந்திய தேசிய லீக் போட்டியிடுகிறது.இந்த நிலையில், சமூக ஜனநாயக முன்னணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக குவைத் மண்டல தமுமுக தேர்தல் பணிக்குழு களத்தில் இறங்கியுள்ளது.
மேலப்பாளையத்தை சேர்ந்த அப்துல் வாகிப், தாழையுத்தை சேர்ந்த அமானுல்லாகான், ஷா நவாஸ் ஆகியோர் தலைமையில் 10 பேர் கொண்ட தேர்தல் பணிகுழு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை சேர்ந்த 1 லட்சத்திற்கும் அதிகமானோர் குவைத்தில் பணிபுரிகின்றனர். இவர்களிடம் கூட்டணியின் நோக்கம் குறித்து விளக்கி தமிழகத்தில் வசிக்கும் அவர்களது குடும்பத்தினரிடம் ச.ஜ.கூ வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்களிக்க வைக்கவும், தேர்தல் பணிக்கான நிதி திரட்டவும் குவைத் தேர்தல் பணி குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக