ஸ்ரீவைகுண்டம் பகுதியில் வேலை பார்க்கும் அரசு ஊழியர்களிடம் பேரூராட்சி அதிகாரிகள் தொழில்வரி வசூலிப்பது வழக்கம். இதில் ரூ.4 ஆயிரம் சம்பளத்துக்கு நியமிக்கப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களுக்கு கடந்த வருடம் வரை ரூ.75 மட்டுமே தொழில் வரி வசூலிக்கப்பட்டு வந்துள்ளது.
தற்போது இந்த தொழில் வரியை ரூ.245 என்று அதிகரித்து அனைவரிடமும் வசூலித்துள்ளனர். சென்னை உள்பட அனைத்து பகுதிகளிலும் ஒப்பந்த அரசு ஊழியர்களிடம் ரூ.75 ஆக இருந்த தொழில் வரியை ரூ.95 ஆக உயர்த்தி வசூலித்துள்ளனர்.
ஆனால் ஸ்ரீவைகுண்டத்தில் மட்டும் பல மடங்கு உயர்த்தி ரூ.245 வசூலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களும் உயர் அதிகாரிகளுக்கு தொழில்வரியை குறைத்து வசூலிக்க புகார் மனு அனுப்பி உள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக