புதன், 25 மார்ச், 2009

ஸ்ரீவைகுண்டம் சிறையில் சிறைக்காவலர் ரகளை

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் மாவட்ட கிளை சிறை உள்ளது. இங்கு சிறைகாவலர் ஒருவர் பணியில் இருந்தார். அப்போது அங்கு வந்த அவரது நண்பர் மது கொண்டு வந்தார். சிறைவளாகத்திலேயே இருவரும் சேர்ந்து மது குடித்தனர்.

மது மயக்கத்தில் சிறை காவலர் கூச்சல் போட்டு ரகளையில் ஈடுபட்டார். இதை பார்த்த அவரது நண்பர் அங்கிருந்து சென்று விட்டார். உடனே சிறைக்காவலர் துப்பாக்கியை எடுத்து சுட்டு விடுவதாக மிரட்டி பெல்ட், தோட்டா போன்றவற்றை எடுத்து வீசினாராம். சிறை கதவுகளையும் அவர் உடைத் ததாக தெரிகிறது.

சிறிது நேரத்தில் மற்ற காவலர்கள் அவரை சமாதானப்படுத்தினர். இது பற்றி பாளை சிறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதை யடுத்து அதிகாரிகள் அந்த சிறைக்காவலருக்கு மருத்துவ விடுப்பு அளித்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin