உலமாக்கள் மற்றும் பள்ளிவாசல் பணியாளர்களுக்கு நல வாரியம் அமைக்க உத்தரவிட்ட முதல்வருக்கு, ஏஐடியுசி சார்பு தமிழ்நாடு பள்ளிவாசல் பணியாளர்கள் சங்கம் பாராட்டு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.எம்.எஸ். அகமது லியாகத் அலி நூரியி, மாநிலப் பொதுச் செயலர் ஜே. ஷேக் அப்துல் காதர் ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர்.
மேலும், நல வாரிய நிர்வாகத்துக்கு உடனடியாக உறுப்பினர்களை நியமித்து, பதிவுப் பணிகளை தொடக்க வேண்டும். அதிக உறுப்பினர்களுடன் மாவட்ட நகர அமைப்புகளைக் கொண்ட பள்ளிவாசல் பணியாளர்கள் சங்கத்துக்கு பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும்.
பள்ளிவாசல் பணியாளர்கள் சங்க கோவை மாவட்ட துணைத் தலைவராக எச்.எம். முகம்மது அலி, செயலர் ஏ சாகுல் அமீது ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக