வியாழன், 19 மார்ச், 2009

எனது கருத்துகள் :

அஸ்ஸாலாமு அலைக்கும் ( வரஹ். )

நமது ஊர் சகோதரரும் எனது அருமை நண்பருமான Z.M. அப்துல் காதர் அவர்களின் கருத்துக்களை ஒத்துக்கொள்கிறேன். ஆனால் நமது ஊரில் பல ஆண்டுகளாக நடத்து வரும் இந்த மாதிரியான நிகழ்ச்சிகளை உடனே நிறுத்த வேண்டும் என்பது இயலாத காரியம்.

இதற்கு நமது குடும்பத்தார் மட்டுமே விலகி இருப்பதும் முடியாத காரியம். எனவே நமது ஊர் ஜமாத்தர்களும் இதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.

நமது ஊர் ஜமாத்தார்கள் இந்த மாதிரியான நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்துவதை தவிர்க்க வேண்டும்.

ஊரில் உள்ள மதரஸாவில் ஓதும் குழந்தைகள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். குழந்தைகளுக்கு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் உள்ளதா? என்பதை அறித்து அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு திரு குரானின் தமிழ் விளக்க உரை, மற்றும் நபிகள் நாயகத்தின் வழி முறைகளையும் விளக்கமாக எடுத்துரைக்க வேண்டும் அப்போதுதான் இது போன்ற நிகழ்ச்சிகளை நிறுத்த வழி பிறக்கும்.

எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவருக்கும் நல்ல உடல் ஆரோகியமான ஒற்றுமையான நீண்ட ஆயுளையும், நமது துவாக்களையும் நிறைவேற்றி வைக்க அனைவரும் துவா செய்து கொள்ளோம்

அன்புடன்
A.S. Hameed
Hongkong.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin