வெள்ளி, 27 மார்ச், 2009

சென்னையில் நாளை முதல் எம்டிஎஸ் தொலைபேசி சேவை!


இதுவரை ராஜஸ்தானில் மட்டுமே இயங்கி வந்த ஷ்யாம் சிஸ்டெமா நிறுவனத்தின் எம்டிஎஸ் தொலைபேசி சேவை இப்போது தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு விஸ்தரிக்கப்பட உள்ளது. நாளைமுதல் இந்த வட்டாரங்களில் எம்டிஎஸ் சேவை ஆரம்பமாகிறது.
தமிழகத்தில் பிஎஸ்என்எல் தவிர, ஏற்கெனவே களத்தில் உள்ள ஏர்டெல், ஏர்செல், வோடபோன், டாடா, ரிலையன்ஸ் வரிசையில் இந்த எம்டிஎஸ் பிராண்டும் சேர்கிறது.
ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த எம்டிஎஸ் சேவையை 13.44 மில்லியன் வாடிக்கையாளர்கள் பெற்று வருகின்றனர். இப்போது மேலும் 5 மாநிலங்களில் சேவைகள் விஸ்தரிக்கப்பட்டுள்ளதால் அடுத்த சில மாதங்களில் இந்த எண்ணிக்கை மேலும் இருமடங்காகப் பெருகும் வாய்ப்புள்ளதாகக் கருதுகிறது ஷ்யாம் சிஸ்டெமா.
20% பங்குகளை கொண்ட ரஷ்யா:
ஷ்யாம் சிஸ்டெமா நிறுவனத்தில் ரஷ்ய நிறுவனமான சிஸ்டெமா நிறுவனத்துக்கு 73.71 சதவிகித பங்குகள் உள்ளன. 2.5 சதவிகித பங்குகள் பொதுமக்களிடம் உளளன. மீதிப் பங்குகளை ஷ்யாம் குழுமம் வைத்துள்ளது.
இபேபோது இந்த ஷ்யாம் சிஸ்டெமா நிறுவனத்தின் 20 சதவிகித பங்குகளை ரஷ்ய அரசு வாங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகின. எம்டிஎஸ் தொலைபேசி சேவையை விஸ்தரிக்க அடுத்த 5 ஆணன்டுகளில் 5.5 பில்லியன் டாலர்கள் செலவிடத் திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டின் மொத்த வாடிக்கையாளர்களில் 7-8 சதவிகிதம் வரை எம்டிஎஸ்ஸின் பங்களிப்பாக இருக்குமாறு திட்டமிடப்பட்டுள்ளதா ஷ்யாம் சிஸ்டெமா செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
ஷ்யாம் சிஸ்டெமா நிறுவனம் இதற்கு முன் ஷ்யாம் டெலிலிங்க் எனும் பெயரில் யுனிடெக் வயர்லெஸ், ஸ்வாம் டெலிகாம், எஸ் டெல், லூப் டெலிகாம் மற்றும் டேடாகாம் சொல்யூஷன்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வந்தது.
இப்போது நாட்டில் மொத்தமுள்ள 23 வட்டாரங்களில் 22-ல் தொலைத் தொடர்பு சேவை வழங்க ஷ்யாம் சிஸ்டெமாவுக்கு அரசு லைசென்ஸ் வழங்கியுள்ளது. இவற்றில் ராஜஸ்தானில் மட்டுமே சிடிஎம்ஏ தொழில்நுட்பத்தில் தொலைபேசி சேவை வழஹ்கி வருகிறது ஷ்யாம் சிஸ்டெமா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin