சென்னை: திமுக சார்பில் லோக்சபா தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து இன்று முதல் மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. மு.க.அழகிரிக்கு மதுரை, தூத்துக்குடியில் சீட் தரக் கோரி ஏராளமான தொண்டர்கள் மனு செய்துள்ளனர்.
மக்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் இன்று முதல் 15ம் தேதி வரை விருப்ப மனுக்களை அளிக்கலாம் என திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்திருந்தார்.பெறப்படும் மனுக்கள் மீது 25ம் தேதி முதல்வர் கருணாநிதி தலைமையில் நேர்காணல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
பொதுத் தொகுதிகளுக்கு ரூ. 10,000 கட்டியும், தனித் தொகுதிகள் மற்றும் பெண்களுக்கு ரூ. 5000 கட்டணம் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து இன்று காலை முதல் சென்னை அண்ணா சாலையி்ல உள்ல திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனுக்கள் விற்பனை தொடங்கியது.நூற்றுக்கணக்கானோர் திரண்டு வந்து விருப்ப மனுக்களைப் பெற்றுச் சென்றனர்.
மதுரை, தூத்துக்குடி :
அழகிரிக்கு மதுரை, தூத்துக்குடி ஆகிய தொகுதிகளில் மு.க.அழகிரி போட்டியிட கோரி நிறையப் பேர் விருப்ப மனுக்களை வாங்கினர்.
அதேபோல மத்திய சென்னையில் தயாநிதி மாறன் போட்டியிட கோரி ஒருவர் மனு வாங்கினார். டி.ஆர்.பாலுவுக்காகவும் மனு வாங்கப்பட்டது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக