துபாயில் வருடந்தோறும் சர்வதேச அளவிலான திருக்குர்ஆன் மனனப் போட்டிகள் அமீரக துணை அதிபர்,பிரதம அமைச்சர் மற்றும் துபாய் ஆட்சியாளருமான ஷேக் முஹம்மத் பின் ராஷித் அல் மக்தூம் அவர்கள் ஆதரவில் நடத்தப்பட்டு வருகிறது.
12 ஆவது ஆண்டாக இவ்வாண்டு நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா சனிக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.
ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா கண்டங்களைச் சேர்ந்த எண்பத்து ஐந்து நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் கலந்து கொண்ட இப்போட்டியில் யேமன் நாட்டைச் சேர்ந்த ஃபரேஸ் அல் அகம் முதல் பரிசைப் பெற்றார். இவருக்கு திர்ஹம் 250,000 பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.
இரண்டாவது இடத்தை லிபியாவின் நூர் அல் தீன் அல் யூனுஸி ( திர்ஹம் 200,000 ), மூன்றாவது இடத்தை குவைத்தின் காலித் அல் அய்னதி ( திர்ஹம் 150,000 ),
நான்காவது இடத்தை ஆப்கானிஸ்தானின் மஜித் அப்துல் சமி ( திர்ஹம் 65,000 ),
ஐந்தாவது இடத்தை மொரிடானியாவின் அஹ்மது தாலிப் ( திர்ஹம் 60,000 )
ஆறாவது இடத்தை லெபனானின் நாஜிஹ் அல் யாஃபி ( திர்ஹம் 55,000 ),
ஏழாவது இடத்தை தைவானின் உசாமா சியான் ( திர்ஹம் 50,000 ),
எட்டாவது இடத்தை பாகிஸ்தானின் முஹம்மது ஆலம் ( திர்ஹம் 45,000 ),
ஒன்பதாவது இடத்தை கேமரூனின் அப்துல் ரஹ்மான் அட்ஜித் ( திர்ஹம் 40,000 ),
பத்தாவது இடத்தை சவுதி அரேபியாவின் தாரிக் அல் லுஹைதான் ( திர்ஹம் 35,000 ) பெற்றனர்.
மேலும் பத்தாவது இடத்திற்குப் பின்னர் எண்பது சதவிகிதம் மதிப்பெண் பெற்றவர்களுக்கு திர்ஹம் 30,000 மும், 70 முதல் 79 சதவிகித மதிப்பெண் பெற்றவர்களுக்கு திர்ஹம் 25,000 ம், 70 சதவிகிதத்திற்கு குறைவாக மதிப்பெண் பெற்றவர்களுக்கு திர்ஹம் 20,000 மும் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது.
சிறந்த குரல் வளத்துக்கான பரிசு மலேசிய மாணவருக்கு வழங்கப்பட்டது.
இப்பரிசுகளை துபாயில் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முஹம்மத் பின் ராஷித் அல் மக்தூம் வழங்கினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக