புதன், 2 செப்டம்பர், 2009

நோன்பை முறிக்கும் செயல்கள்

ஒருவர் நோன்பிருக்கும் காலத்தில் ஏற்படும் சில எதிர்பாராத விஷயங்களும், தீய பழக்க வழக்கங்களும் நோன்பை முறிக்கும் ஆற்றல் பெற்றவை.

அவற்றை சரியாக உணர்ந்து நோன்பை நல்ல முறையில் நோற்க வேண்டியது கடமையாகிறது.

webdunia photoWDஅதாவது, புகைப் பிடிப்பது. புகைப்பிடிப்பது உடலுக்கு பயன்தராது என்றாலும் அவற்றால் நோன்பு முறிந்துவிடும்.

முத்தமிடுதல், அணைத்தல், சுய இன்பம் போன்றவற்றை ஒருவ‌ர் காம நோ‌க்க‌த்துட‌ன் செய்வாரேயானால் அவர்களது நோன்பு முறிந்துவிடும். ஆனால், தூக்கத்தில் ஒருவரது இந்திரியம் தானாகவே வெளியேறினால் நோன்பு முறியாது.

உணவைப் போன்று உடலுக்கு சக்தி அளிக்கும் மருந்துகளையோ, குளுக்கோஸ் போன்றவற்றையோ உடலுக்குள் செலுத்தினால் நோன்பு முறிந்துவிடும்.

பெண்களுக்கு மாதவிடாய் அல்லது பிரசவ இரத்தம் வெளியேறினால் நோன்பு முறிந்துவிடும்.

வேண்டுமென்றே வாந்தி எடுப்பதால் நோன்பு முறிந்து விடும். அதே சமயம், தானாகவே வாந்தி வந்தால் நோன்பு முறியாது.

இதுபோன்று நோன்பை முறிக்கும் செயல்கள் ஏற்பட்டுவிட்டால், உடனடியாக நோன்பை முடித்துக் கொண்டு பின்னர் இந்த நோன்பை தொடர வேண்டும்.

ஈமான், இஸ்திஸாப் என்பதன் கருத்து

அண்ணல் நபி(ஸல்) அவர்கள் ரமலான் மாத்தின் நோக்கத்தை இவ்வாறு சுட்டிக் காட்டியுள்ளார்.

"ஒருவன் ஈமானுடன் (இறை நம்பிக்கை), இஹ்திஸாபுடனும் (சீர்தூக்கிப் பார்த்தல்) ரமலானில் நோன்பு வைத்தால், அவன் முன்பு செய்த குற்றங்கள் அனைத்தும் மன்னிக்கப்படும்" என்கிறார்.

webdunia photoWDஈமான் என்றால், இறைவன் குறித்து ஒரு இஸ்லாமியர் எந்தக் கொள்கையைக் கடைபிடித்தல் அவசியமோ அது அவன் உள்ளம் முழுவதும் பசுமையாக படர்ந்து இருக்க வேண்டும்.

இஸ்திஸாப் என்பது, மனிதன் தனது நோன்பு காலத்தில் தனது எண்ணங்களும், செயல்களும், இறைவனை நோக்கியதாகவும், இறைவனின் திருப்தியையும், உவப்பையும் பெறும் நோக்கில் இருக்கின்றனவா என்பதை சீர்தூக்கிப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்.

ஒரு மனிதன் தனது நோன்பு காலத்தில் இந்த இரு பண்புகளை எப்போதும் கொண்டிருக்க வேண்டும்ட என்று அண்ணல் நபி(ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.

இன்றைய வசனம்-நோன்பு

அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் தம் மனைவியருடன் சேர்வதில்லை என்று சத்தியம் செய்திருந்தார்கள். அப்போது அவர்களின் கால்(நரம்பு) பிசகியிருந்தது. அவர்கள் ஒரு பரணில் இருபத்தொன்பது நாள்கள் தங்கினார்கள். அப்போது அவர்களிடம் 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் ஒரு மாதம் என்று சத்தியம் செய்யவில்லையா!' என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'மாதம் என்பது இருபத்தொன்பது நாள்களாகவும் அமையும்!" என்றார்கள்.

Volume:2 Book:30

1912. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" "துல்ஹஜ், ரமலான் ஆகிய பெருநாள்களுக்குரிய இரண்டு மாதங்கள் சேர்ந்தால் போல் குறையாது." என அபூ பக்ரா(ரலி) அறிவித்தார்.

Volume:2 Book:30

1913. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" நாம் உம்மி சமுதாயமாவோம். எழுதுவதை அறிய மாட்டோம்; விண் கலையையும் அறிய மாட்டோம். மாதம் என்பது இப்படியும் அப்படியும் இருக்கும்; அதாவது சில வேளை இருபத்தொன்பது நாள்களாகவும் சில வேளை முப்பது நாள்களாகவும் இருக்கும்!" என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.


Volume:2 Book:30

1914.இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" "ரமளானுக்கு முதல் நாளும் அதற்கு முதல் நாளும் உங்களில் எவரும் நோன்பு நோற்கக் கூடாது; அந்நாள்களில் வழக்கமாகத் நோற்கும் நோன்பு அமைந்தாலே தவிர! அவ்வாறு அமைந்தால்அந்நாளில் நோன்பு நோற்கலாம்!" என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

<>
Volume:2 Book:30

1915.பராஉ(ரலி) அறிவித்தார். (ஆரம்ப காலத்தில்) நபித்தோழர்கள் நோன்பு நோற்று, நோன்பை நிறைவு செய்யும் நேரம் வந்து, அதற்கு முன்பே உறங்கி விட்டிருந்தால் அன்றைய இரவிலும் (தொடர்ந்து) பகலிலும் மாலை வரை எதையும் உண்ண மாட்டார்கள். (ஒரு முறை) கைஸ் இப்னு ஸிர்மா(ரலி) நோன்பு நோற்றிருந்தார்; நோன்பு நிறைவு செய்யும் நேரம் வந்ததும் தம் மனைவியிடம் வந்து, 'உன்னிடம் உணவு ஏதும் உள்ளதா?' என்று கேட்டார்; அவரின் மனைவி, 'இல்லை! எனினும் நான் சென்று உமக்காக (உணவைத்) தேடி வருகிறேன்!" என்றார். கைஸ் இப்னு ஸிர்மா(ரலி) அன்றைய தினம் கூலி வேலை செய்துவிட்டு வந்ததால் அவருக்கு உறக்கம் மேலிட்டுவிட்டது. அவரின் மனைவி வந்து அவரைக் கண்டபோது, 'உமக்கு நஷ்டம் ஏற்பட்டுவிட்டது' என்றார் நண்பகலானதும் கைஸ்(ரலி) மூர்ச்சையுற்றார். இது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கூறப்பட்டபோது, 'நோன்புக் கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது என்ற வசனமும் 'இன்னும் ஃபஜ்ரு (அதிகாலை) நேரம் என்ற வெள்ளை நூல் (இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள், பருகுங்கள் என்ற வசனமும் இறங்கின. இதனால் நபித்தோழர்கள் அதிக மகிழ்ச்சியடைந்தார்கள்.


1916. அதீ இப்னு ஹாதிம்(ரலி) அறிவித்தார். 'கருப்புக் கயிற்றிலிருந்து வெள்ளைக் கயிறு தெளிவாகும் வரை' என்ற (திருக்குர்ஆன் 02:187) இறைவசனம் அருளப்பட்டபோது, நான் ஒரு கருப்புக் கயிற்றையும் வெள்ளைக் கயிற்றையும் எடுத்து தன் தலையணையில் வைத்துக் கொண்டேன்; இரவில் அதைப் பார்க்கலானேன்; எனக்கு எதுவும் தெளிவாகவில்லை! விடிந்ததும் நபி(ஸல்) அவர்களிடம் சென்று இதுபற்றிக் கூறினேன்; அதற்கு நபி(ஸல்) அவர்கள் '(கருப்புக் கயிறு என்பதின் கருத்து) இரவின் கருமையும் (வெள்ளைக் கயிறு என்பதின் கருத்து) விடியலின் வெண்மையும் தான்!" என்று பதிலளித்தார்கள்.

Volume:2 Book:30

1917. ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார். "கருப்புக் கயிற்றிலிருந்து வெள்ளைக் கயிறு உங்களுக்குத் தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள்; பருகுங்கள்!" என்ற (திருக்குர்ஆன் 02:187) இறைவசனம் அருளப்பட்டது! அப்போது அவ்வசனத்தில் 'மினல் ஃபஜ்ரி (அதிகாலை எனும்)' என்னும் வாசகம் இருக்கவில்லை! அப்போதெல்லாம் மக்கள் நோன்பு நோற்க நினைத்தால் ஒரு காலில் வெள்ளைக் கயிற்றையும் கட்டிக் கொள்வார்கள். அவ்விரண்டும் கண்ணுக்குத் தெரியும்வரை உண்டு கொண்டே இருப்பார்கள்! பிறகுதான் 'மினல் ஃபஜ்ரி (அதிகாலை எனும்)' என்னும் வாசகம் (அவ்வசனத்துடன்) இறங்கியது. 'இரவையும் பகலையுமே அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகிறான்" என்று அப்போதுதான் மக்கள் விளங்கினர்!" (பார்க்க: 590ல் உள்ள02:187ம் எண் இறைவசனத்தின் மொழியாக்கம்)

Volume:2 Book:30

1918. ஆயிஷா(ரலி) இப்னு உமர்(ரலி) ஆகியோர் அறிவித்தார். பிலால்(ரலி), (ஃபஜ்ரு நேரத்திற்கு முன்) இரவிலேயே பாங்கு சொல்வார்கள்; அப்போது நபி(ஸல்) அவர்கள், 'இப்னு உம்மி மக்தூம் பாங்கு சொல்லும்வரை உண்ணுங்கள்; பருகுங்கள்! ஏனெனில், அவர்தாம் ஃபஜ்ரு (கைவறை) நேரம் வந்ததும் பாங்கு சொல்கிறார்!" என்று குறிப்பிட்டார்கள். "அவர் பாங்கு சொல்லிவிட்டு இறங்குவார்; இவர் பாங்கு சொல்வதற்கு ஏறுவார் என்பதைத் தவிர இரண்டு பாங்குக்குமிடையே பெரிய இடைவெளி இருக்காது!" என்று காஸிம்(ரஹ்) கூறினார்.

Volume:2 Book:30

1920.ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார். "நான் என் குடும்பத்தாருடன் ஸஹ்ர் செய்துவிட்டு நபி(ஸல்) அவர்களுடன் (ஸுப்ஹுத்) தொழுகையை அடைவதற்காக விரைவாகச் செல்வேன்!"

ரமலான் நோன்பை முன்னிட்டு பராக் ஒபாமா இஃப்தார் விருந்து

ரமலான் நோன்பை முன்னிட்டு வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இஃப்தார் விருந்து அளித்தார். இதில் அமெரிக்க வாழ் முஸ்லிம்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

உலகில் வாழும் முஸ்லிம் மக்களுக்கும், அமெரிக்காவுக்கு இடையே நல்லுறவை மேம்படுத்தும் நோக்கில் இந்த விருந்துக்கு ஏற்பாடு செய்ததாக தெரிவித்த ஒபாமா, விருந்திற்காக தயார் செய்யப்பட்ட உணவுப் பதார்த்தங்கள் பற்றி தமக்கு ஏதும் தெரியாது என்றாலும், அவை சுவையாக இருக்கும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக நகைக்சுவை பொங்கப் பேசினார்.

ஒபாமாவுக்கு முன் அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ்ஷும், வெள்ளை மாளிகை இஃப்தார் விருந்து அளித்து வந்தது குறிப்பிடத்தக்கது

இஸ்லாத்தின் பார்வையில் சிறந்தவைகள்!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ

புகழனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே; அவனது சாந்தியும்-சமாதானமும் அகிலத்திற்கோர் அருட்கொடையாம் அண்ணல் நபி[ஸல்] அவர்கள் மீதும், அவர்களை பின்பற்றி வாழ்ந்த, வாழுகின்ற அனைவர் மீதும் உண்டாகட்டுமாக!

நம்முடைய வாழ்வில் நாம் செய்யும் செயல்களில் எவை அனுமதிக்கப்பட்டவை என்பதையும் எவைகள் அனுமதிக்கப்படாதவை என்பதையும் நம்மில் பலர் அறிந்து வைத்துள்ளனர். அதே நேரத்தில் நமது வாழ்வின் செயல்கள் மற்றும் நமது அமல்களில் எவைகள் சிறந்தவை என்பதையும், இன்னும் இஸ்லாம் எவைகளை சிறந்தவை என்று கூறுகிறது என்பதில் சிலவற்றை பார்க்கவிருக்கிறோம்.

இஸ்லாத்தில் சிறந்தது

'இறைத்தூதர் அவர்களே! இஸ்லாத்தில் சிறந்தது எது?' என்று நபித்தோழர்கள் கேட்டதற்கு 'எவருடைய நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கிறாரோ அவரின் செயலே சிறந்தது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என அபூ மூஸா(ரலி) அறிவித்தார். நூல்;புஹாரி எண் 11 ]


'ஒருவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் 'இஸ்லாத்தில் சிறந்தது எது' எனக் கேட்டதற்கு, '(பசித்தோருக்கு) நீர் உணவளிப்பதும் நீர் அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் ஸலாம் கூறுவதுமாகும்' என்றார்கள்" என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.[நூல்;புஹாரி எண் 12 ]

'நற்செயல்களில் சிறந்தது

'செயல்களில் சிறந்தது எது?' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வினவப்பட்டதற்கு, 'அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்பிக்கை கொள்வது' என்றார்கள். 'பின்னர் எது?' என வினவப்பட்டதற்கு, 'இறைவழியில் போரிடுதல்' என்றார்கள். 'பின்னர் எது?' என்று கேட்கப்பட்டதற்கு, 'அங்கீகரிக்கப்படும் ஹஜ்' என்றார்கள்' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.[புஹாரி எண் 26 ]
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) கூறினார். நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! நற்செயல்களில் சிறந்தது எது?' என்று கேட்டேன். அவர்கள், 'தொழுகையை அதற்குரிய வேளையில் தொழுவது" என்று கூறினார்கள். 'பிறகு எது (சிறந்தது?)" என்று கேட்டேன் அவர்கள், 'பிறகு தாய்தந்தையருக்கு நன்மை செய்வது" என்று பதிலளித்தார்கள். நான், 'பிறகு எது (சிறந்தது?)" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'இறைவழியில் அறப்போரிடுவதாகும்" என்று பதில் சொன்னார்கள்.[புஹாரி எண் 2782 ]

உலகத்தைவிட சிறந்தது;

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" இறைவழியில் காலையில் சிறிது நேரம் அல்லது, மாலையில் சிறிது நேரம் (போர் புரியச்) செல்வது உலகத்தையும் அதிலுள்ள பொருட்களையும் விடச் சிறந்தது. உங்களில் ஒருவரின் வில்லின் அளவுக்குச் சமமான, அல்லது ஒரு சாட்டையளவுக்குச் சமமான (ஒரு முழம்) இடம் கிடைப்பது உலகத்தையும் அதிலுள்ளவற்றையும் விடச் சிறந்தது. சொர்க்கவாசிகளில் (ஹூருல் ஈன்களில்) ஒரு பெண், உலகத்தாரை எட்டிப் பார்த்தால் வானத்திற்கும் பூமிக்குமிடையே உள்ள அனைத்தையும் பிரகாசமாக்கி விடுவாள்; பூமியை நறுமணத்தால் நிரப்பி விடுவாள். அவளுடைய தலையிலுள்ள முக்காடோ உலகத்தையும் அதிலுள்ளவற்றையும் விடச் சிறந்ததாகும்.[புஹாரி எண் 2796 ]

இறைவனிடத்தில் சிறந்தது

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' அல்லாஹ் (மறுமையில்) சொர்க்கவாசிகளை நோக்கி 'சொர்க்கவாசிகளே!' என்று அழைப்பான். அவர்கள் 'எங்கள் அதிபதியே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறோம். நன்மை அனைத்தும் உன் கரங்களிலேயே உள்ளது' என்று பதிலளிப்பார்கள். அப்போது அல்லாஹ் நீங்கள் திருப்தியடைந்தீர்களா?' என்று கேட்பான். மக்கள் 'எங்கள் அதிபதியே! நாங்கள் திருப்தியடையாமலிருக்க எங்களுக்கு என்ன? நீ உன் படைப்புகளில் எவருக்கும் வழங்கியிராதவற்றை எங்களுக்கு வழங்கியிருக்கிறாயே!' என்று பதிலளிப்பார்கள். அதற்கு அல்லாஹ், 'இதைவிடவும் சிறந்ததை நான் உங்களுக்கு வழங்கட்டுமா?' என்று கேட்பான். சொர்க்கவாசிகள் 'எங்கள் அதிபதியே! இதைவிடச் சிறந்தது எது?' என்று கேட்பார்கள். அதற்கு அல்லாஹ் 'உங்களின் மீது என் திருப்தியைப் பொழிகிறேன். இனி என்றுமே உங்களின் மீது நான் கோபப்படமாட்டேன்' என்று சொல்வான். என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.[புஹாரி எண் எண் 7518 ]

கடமையல்லாத தொழுகையை நிறைவேற்றும் இடத்தில் சிறந்தது;
ஒரு மனிதனின் தொழுகைகளில் சிறந்தது அவன் தன்னுடைய வீட்டில் தொழுவது தான்; கடமையான தொழுகையைத் தவிர' என்றார்கள்.[புஹாரி எண் 7290 ]

சகுனத்தில் சிறந்தது;

அபூ ஹுரைரா(ரலி) கூறினார் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'பறவை சகுனம் ஏதும் கிடையாது. சகுனங்களில் சிறந்தது நற்குறியாகும்' என்று கூறினார்கள். மக்கள், 'நற்குறி என்பது என்ன இறைத்தூதர் அவர்களே?' என்று கேட்டார்கள் அதற்கு அவர்கள், 'நீங்கள் செவியுறுகிற நல்ல (மங்கலகரமான) சொல்தான்' என்று பதிலளித்தார்கள்.[புஹாரி எண் 5755 ]
தர்மத்தில் சிறந்தது;

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! தருமத்தில் சிறந்தது எது?' என்று கேட்டார். 'நீங்கள் ஆரோக்கியமுள்ளவராகவும், பொருளாசை கொண்டவராகவும் செல்வந்தராக விரும்பிய வண்ணம் வறுமையை அஞ்சியவராகவும் இருக்கும்போது தர்மம் செய்வதே சிறந்த தர்மம் ஆகும். உன் உயிர் தொண்டைக் குழியை அடைந்து விட்டிருக்க, 'இன்னாருக்கு இவ்வளவு கொடுங்கள்; இன்னாருக்கு இவ்வளவு கொடுங்கள்" என்று சொல்லும் (நேரம் வரும்) வரை தருமம் செய்வதைத் தள்ளிப் போடாதே. (உன் மரணம் நெருங்கி விடும்) அந்த நேரத்திலோ அது இன்னாருக்கு (உன் வாரிசுகளுக்கு) உரியதாய் ஆம் விட்டிருக்கும்" என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.[புஹாரி எண் 2748 ]

செல்வத்தில் சிறந்தது;

'ஒரு காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அன்று முஸ்லிமின் செல்வங்களில் ஆடுதான் சிறந்தது. குழப்பங்களிலிருந்து மார்க்கத்தைக் காப்பாற்றிக் கொள்ள அந்த ஆட்டைக் கூட்டிக் கொண்டு அவன் மலைகளின் உச்சியிலும் மழை பெய்யும் இடங்களிலும் சென்று வாழ்வான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என அபூ ஸயீத் அல் குத்ரி(ரலி) அறிவித்தார்.[புஹாரி எண் 19 ]

செவ்வாய், 1 செப்டம்பர், 2009

பெற்றோர்களை பேணுவோம்!

ஆக்கம்: மௌலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி)

உங்களி்ன் இந்த அபரிதமான வளர்ச்சிக்கு யார் காரணம்? என்ற கேள்விக்கு எனது தாயும், தந்தையும் தான் என லட்சக்கணக்கானோர் கூடியிருந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் நன்றிப் பெருக்குடன் உரத்தக்கூறியது வேறு யாருமல்ல, இரட்டை ஆஸ்கர் விருது நாயகன் நமது ஏஆர் ரஹ்மான் தான்!.

தனது பெற்றோர்களின் மீது வைத்திருந்த மதிப்பு, மரியாதையினால் தான் இறைவன் இந்த உயர்வை ஏஆர் ரஹ்மானுக்கு வழங்கினான். அதனால் தான் தமது பேச்சின் முடிவில் எல்லாப் புகழும் இறைவனுக்கே! எனக்கூறி நிறைவு செய்தார்.

பெற்றோர்களின் மனம் குளிரும்படியாக நடந்து கொள்ளும் எந்தப் பிள்ளைகளும் இறைவனால் கைவிடப்பட மாட்டார்கள் என்பதற்கு எவ்வளவோ உதாரணங்களை அடுக்கி கொண்டே போகலாம். அதில் ஒரு உதாரணம் தான் ஏஆர் ரஹ்மான்!.
உங்களை பெற்ற தாய், தந்தையரை பார்த்து சீய்... என்ற வார்த்தையை கூட பயன்படுத்தாதீர்கள் என இறைவன் அல் குர்ஆன் மூலம் மனித சமுதாயத்தை எச்சரிக்கிறார்கள். மாறாக பெற்றோர்களிடம் பேசும் போது கண்ணியமாக பேசுங்கள் என்றும் இறைவனே சொல்லித் தருகிறான்.

வயதான தாய், தந்தையரோ அல்லது இருவரில் ஒருவரையோ அடைந்து அவர் (பெற்றோர்)களின் கோபத்திற்குள்ளாகி எவன் சொர்க்கம் நுழையவில்லையோ? அவனும் நாசமடைவானாக என்று வானவர் கோமான் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் என்னிடம் கூறியபோது ஆமீன்! அப்படியே நடக்கட்டும் என நானும் பிரார்த்தனை செய்தேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிம்பரில் இருந்து கொண்டு தமது கைகளை உயர்த்தி மூன்று முறை ஆமீன் கூறிய நிகழ்வில் ஒன்றாய் பெற்றோர்களை கண்ணியம் செய்வதை பற்றி குறிப்பிட்டுள்ளார்கள்
.
மரணத்திற்குப் பிறகு நீ எங்கே செல்ல ஆசைப்படுகிறாய்? என யாரிடத்தில் கேட்டாலும் நல்லவர், தீயவர் என்ற பாகுபாடில்லாமல் சொல்லக்கூடிய ஒரே பதில் சொர்க்கம் என்பது தான்! காரணம் அங்கு தான் எவ்வித வேதனையில்லாமல் சுக போகமாக வாழ்வதற்குரிய சூழ்நிலை உள்ளதாக இறைவனும் இறைத்தூதரும் அறிவித்துள்ளார்கள்.

இப்படி ஆசைபடுவதில் தவறில்லை! அதே நேரத்தில் நாம் அதற்கு தகுதியானவர்களா? என்று சிந்திக்க வேண்டுமா? இல்லையா?

ஒருவர் சொர்க்கம் செல்ல வேண்டுமென நினைத்தால் அதற்குரிய அடிப்படை தகுதியே பெற்றோரிகளின் மனம் குளிரும் படியாக வாழ்ந்திருக்க வேண்டும். பெற்றோர்களின் உயர்வைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "பிள்ளைகளாய் இருப்போரே, தாயின் காலடியில் தான் உங்களுக்கான சொர்க்கம் உள்ளது" எனக் கூறுகிறார்கள்.

அதாவது தாயின் காலடி என்பது தாயின் மன திருப்தியை குறிக்கிறது என்பதாக அறிஞர்கள் கருத்துரைக்கிறார்கள். நாம் சொர்க்கம் செல்வதற்கு காரணமாய் இருக்கும் பெற்றோர்களையே முதியோர் இல்லம் என்ற நரகத்தில் தள்ளி விடுவது எவ்வளவு பெரிய அபத்தம்!
முன்பொரு காலத்தில் மூலை முடுக்கெல்லாம் பெட்டி கடைகள் தானிருக்கும்.

இன்றோ ஊர்தோறும் முதியோர் இல்லங்கள் உருவாகி வருகின்றன. இதெல்லாம் அதிகப்படியான மனிதர்கள் சொர்க்கத்தை விட்டு விட்டு நரகத்தை நோக்கிய தங்களது பயணத்தை தொடர்கிறார்கள் என்று தான் கூற வேண்டும்.

இன்று பிள்ளைகளாய் இருப்பவர்கள் தான் நாளை பெற்றோர்களாய் மாறுகிறோம்! "முன் செய்யின் பின் விளையும்" என்ற பழமொழியை மனதில் இருத்தி வாழ வேண்டும். இன்று நமது பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்தால், நாளை நமது பிள்ளைகள் நம்மை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடுவர். முதியோர் இல்லங்கள் மூடப்படாமல் நீடித்து இருப்பதற்குரிய காரணம் புரிகிறதா?

பெற்றோர்களுக்கு பிள்ளைகள் எப்படி பிரார்த்தனை செய்ய வேண்டுமென்பதை இதோ, இறைவனே கூறுகிறான்: "எங்கள் இறைவா, நாங்கள் சிறு பிள்ளைகளாய் இருந்த போது எங்களின் பெற்றோர்கள் எப்படி எங்கள் மீது இரக்கம் காட்டினார்களோ, அதேபோல் எங்கள் பெற்றோர்களின் மீதும் நீ இரக்கம் காட்டுவாயாக" என்ற இந்த பிரார்த்தனையை தொடர்ந்து செய்து வர வேண்டுமென்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

இரக்கம் எனற் வார்த்தைக்கே அர்த்தம் தெரியாதவர்களாய் நாமிருக்கும் போது பெற்றோர்களின் பெருமையை எவ்வாறு உணர்ந்து கொள்ள முடியம்?
நாம் குழந்தை பருவத்தில் இருக்கும் போது பாலூட்டிய தாய் தனக்கு பிடித்த உணவு தன் பிள்ளைக்கு ஒத்துக் கொள்ளுமா? என யோசித்து பிள்ளைக்கு ஆகாது என தெரிந்ததும் ஆசைபட்ட உணவுகளை உண்ண மறுத்துவிடுகிறாள்.

கருவை வயிற்றில் சுமப்பதற்கு முன்பு வரை மிகவும் விரும்பி உண்ட உணவையெல்லாம் கருவை சுமந்ததற்குப் பின் விஷமாக்கி கொண்டது யாருக்காக? எதற்காக?
எல்லாம் பிள்ளைகளாய் இருந்த நமக்காகத்தானே, நமது ஆரோக்கியத்திற்காகத் தானே, அப்படியெல்லாம் கஷ்டப்பட்டு பெற்றெடுத்த அன்னையவளை வயதான காலத்தில் அரவணைத்துக் கொள்ளாமல் முதியோர் இல்லங்களிலும், அனாதை விடுதிகளிலும் அடைக்கலம் தேடிக்கொள்ள வைப்பது எவ்வளவு பெரிய கொடுமை!

ஒரு முறை மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் பிச்சை எடுத்து கொண்டிருந்த வயதான மூதாட்டி ஒருவரை சந்தித்தேன். அவர் என்னிடம் யாசகம் கேட்ட போது நடந்த சந்திப்பு தான் அது! அவர் எதிர்பார்த்ததை நான் கொடுத்துவிட்டு, ஏம்மா இந்த வயதான காலத்தில் இப்படி திரிகிறீர்களே, உங்களுக்கு குடும்பம், பிள்ளைகள் இல்லையா? என பரிவோடு கேட்டதும் தான் தாமதம் பொலபொலவென வடிந்த கண்ணீர் துளிகளை துடைத்து கொண்டே கூறினார், தம்பி, எனக்கு நான்கு ஆண், இரண்டு பெண் என ஆறு குழந்தைகள் இருக்கிறார்கள்.

என் பிள்ளைகள் சிறுவர்களாயிருக்கும் போதே எனது குடிகார கணவனின் இம்சை தாங்க முடியாமல் ஒரு கட்டத்தில் பிள்ளைகளுக்கு விஷத்தை கொடுத்துவிட்டு நானும் விஷம் சாப்பிட்டு செத்துவிடலாம் என முடிவு செய்து கணவன் வீடு வராத ஒரு இரவில் திட்டமிட்டபடி விஷத்தை சாதத்தில் கலந்து பிள்ளைகளுக்கு ஊட்ட முயன்ற போது அவர்களின் பிஞ்சு முகத்தை பார்த்ததும் கைகள் நடுங்கி விஷ சாதத்தை தூக்கியெறிந்து விட்டு என் பிள்ளைகளை கட்டிப்பிடித்து கதறினேன்.

ஒவ்வொரு பத்து மாதமும் என் பிள்ளைகளை சுமந்த கஷ்டம் எனக்குத் தானே, தெரியும்! குடிகார கணவனால், கைவிடப்பட்ட நான் வைராக்கியமாய் வீடு வீடாக போய் பத்து பாத்திரம் கழுவி கொடுத்து அதன் மூலம் வரும் சொற்ப வருவாயில் என் ஆறு பிள்ளைகளையும் வளர்த்தேன்.

ஒரு கட்டத்தில் இட்லி, வடை செய்து தெரு தெருவாய் கூவி கூவி விற்றும் என் பிள்ளைகளை வளர்த்தேன். என் மூத்த மகன் கல்லூரி படிப்பை முடிக்கும் வரைக்கும் எனது இட்லி, வடை வியாபாரம் தொடர்ந்தது.

படிப்பில் என் பிள்ளைகள் கெட்டிக்காரர்கள். அதனால் கவர்மென்ட் ஸ்காலர்ஷிப் மூலமே மேற்படிப்பும் என் பிள்ளைகளுக்கு இலவசமாக கிடைத்தது. பிறகு எல்லாரும் படித்து முடித்து வேலைக்கு செல்ல ஆரம்பித்ததும் அவரவர்களுக்குரிய துணையை தேடி திருமணமும் முடித்துக் கொடுத்து அவரவர் தனி குடித்தனம் போய்விட்டனர்.

நான் மட்டும் என் மூத்த மகன் வீட்டிலேயே இருந்து கொண்டேன். என் மகன் செய்யும் ஊதாரித்தனமான செலவுகளை சுட்டிக்காட்டி அவ்வவ்போது பழசை நினைவு படுத்தி புத்திமதி கூறுவேன். இது பிடிக்காத அவன் என்னை வீட்டை விட்டு துரத்திவிட்டேன். பிறகு வாரம் ஒரு வீடு என மற்ற பிள்ளைகளை தேடி போக ஆரம்பித்தேன்.

எனது கடைசி காலத்தில் என்னை சோற்றுக்கு வழியில்லாத பிச்சைக்காரியை போலத்தான் நினைத்தார்களே தவிர பெற்றெடுத்தவள் என்றோ அல்லது நமக்கு மறுபிறவி கொடுத்தவள் என்றோ நினைக்கவில்லை. (சாதத்தில் விஷம் கலந்து கொல்ல முயற்சித்தது என் பிள்ளைகளுக்கு தெரியாது) பெற்ற பிள்ளைகளோ என்னை பிச்சைக்காரியை போல் பார்க்கும் கொடுமையை சகித்துக் கொள்ள முடியாமல் தான் முகம் தெரியாத ஊரில் இன்று உண்மையான பிச்சைக்காரியாக உன் முன் நிற்கிறேன் என அந்த மூதாட்டி கூறிய போது உழைத்து தேய்ந்து போயிருந்த அவரது கைகளை பார்த்ததும் எனக்குள் பீறிட்டு கிளம்பிய அழுகையை அடக்க முடியாமலும், அந்தம்மாவுக்கு ஆறுதல் சொல்ல முடியாமலும், அநியாயமாக இந்தம்மா பெற்று ஆறு பிள்ளைகளும் நரகத்திற்குரியவர்களாகி விடுவார்களோ என்ற கவலையாலும், நன்றி மறந்த அந்த பிள்ளைகள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற கோபத்துடனுமே அந்தம்மாவை விட்டு விலகினேன்.

பெற்றோர்களுக்கெதிரான சமூக கொடுமைகள் தலைவிரித்தாடுவதற்கு நன்றி கொன்றல் ஒன்றே தான் காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. பிள்ளைகளாய் இருப்போரே! நாளை நமக்கும் அந்த நிலை வருவதற்கு முன் நமது பெற்றோர்களை பேணுவோம். அவர்களது மன திருப்தியை பெற்றுக் கொள்வோம்!

எனக்குள் பீறிட்டு கிளம்பிய அழுகையை அடக்க முடியாமலும், அந்தம்மாவுக்கு ஆறுதல் சொல்ல முடியாமலும், அநியாயமாக இந்தம்மா பெற்று ஆறு பிள்ளைகளும் நரகத்திற்குரியவர்களாகி விடுவார்களோ என்ற கவலையாலும், நன்றி மறந்த அந்த பிள்ளைகள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற கோபத்துடனுமே அந்தம்மாவை விட்டு விலகினேன்.

பெற்றோர்களுக்கெதிரான சமூக கொடுமைகள் தலைவிரித்தாடுவதற்கு நன்றி கொன்றல் ஒன்றே தான் காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. பிள்ளைகளாய் இருப்போரே! நாளை நமக்கும் அந்த நிலை வருவதற்கு முன் நமது பெற்றோர்களை பேணுவோம். அவர்களது மன திருப்தியை பெற்றுக் கொள்வோம்!

ரமலான் சிந்தனைகள்


கஷ்டங்களைக் கடந்து செல்லும் ஒவ்வொரு நொடியும் ஒன்றை மறவாதீர்கள்.
நாம் எடுத்துக் கொண்டிருக்கும் பணி இறைவனுடையது. நாம் எந்தக் கொள்கையின் பால் மக்களை அழைக்கின்றோமோ அது இறைவனின் கொள்கை.


இந்தக் கொள்கை ஈடிணையற்றது. நாம் சட்டமெனக் கூறுவது இறைவனின் சட்டமாகும். இந்த இறைவனின் கொள்கைக்கு, இந்த சட்டத் திற்கு இணையான ஒரு கொள்கையோ சட்டமோ உலகத்திலுமில்லை, வானத் திலுமில்லை.

இன்று இந்த உலகம் இந்த சட்டத்திற்காகவும் இந்தக் கொள்கைக் காகவும் இந்த நீதிக்காகவும் ஏங்கிக் கொண்டிருக்கின்றது. இன்று நமது பாதை தெளிவாகிவிட்டது. சூழ்நிலையும் நமக்கு சாதகமாகவே இருக்கின் றது. போற்றத்தக்க விதத்தில் இந்தப் பணியில் நம்மை அர்ப்பணித்துக் கொண்ட நாம் சுய நலமற்றவர்களாக, ஏன் இந்த உலகத்திலேயே எந்தக் கைமாறும் எதிர்பார்க்காதவர்களாக இருக்கின்றோம்.

இதற்காக நாம் இறைவனுக்கு நன்றி சொல்லவேண்டும். நாம் இறைவனின் திருப்தியொன்றையே கைமாறாக எதிர்பார்க்கின்றோம். நாம் இறைவனின் நல்லடியார்கள் வெற்றிபெற வேண்டும் என்ற ஒன்றையே நாடுகின்றோம்.

எமது உழைப்பும் வியர்வையும் இறைவனுக்காகவே. நாம் அவனை மட்டுமே சார்ந்திருக்கின்றோம்.

அவனது உதவியை மட்டுமே நாடுகின் றோம். அவனுடைய உதவியைப் பெற்றுவிட்ட எம்மை இவ்வுலகத்தில் எந்த சக்தியாலும் வெற்றி கொள்ள முடியாது.
இமாம் ஹஸனுல் பன்னாஹ்(ரஹ்…)

நன்றி:மீள்பார்வை

LinkWithin

Blog Widget by LinkWithin