சனி, 26 பிப்ரவரி, 2011

ஸ்ரீவை வட்டம், சிவகளையில் புதிய சித்தா மருத்துவ பிரிவு கட்டிடம்: அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்!


ஸ்ரீவைகுண்டம் வட்டம், சிவகளை கிராமத்தில் இன்று (25.2.2011) ரூ.9.56 லட்சம் மதிப்பிலான புதிய சித்தா மருத்துவ பிரிவு கட்டடத்தை சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் சி.என்.மகேஸ்வரன், தலைமை வகித்தார்.

விழாவில் அமைச்சர் பேசுகையில், தமிழக முதல்வர் ஏழை, எளிய மக்கள் பயன் பெறும் வகையில் சுகாதாரத் துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து மக்கள் நோயற்ற வாழ்வு வாழ எண்ணற்ற பல திட்டங்களை தீட்டி நிறைவேற்றி வருகிறார். இயற்கை சார்ந்த மருத்துவ வசதிகள் தங்கள் கிராமத்திலே கிடைப்பதால் கிராம மக்கள் இத்தகைய அரிய வாய்ப்பினை பயன்படுத்தி அரோக்கியமான வாழ்வு வாழ கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

முன்னதாக அமைச்சர் கீதாஜீவன், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் 20 பயனாளிகளுக்கு தலா ரூ.3000 வீதம், ரூ.60 ஆயிரத்திற்கான காசோலைகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ எம்.பி.சுடலையாண்டி, ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் செல்வி அருள், மாவட்ட கவுன்சிலர் பிரம்மசக்தி, ஒன்றியக் கவுன்சிலர் எஸ்.ஆறுமுகப் பெருமாள், சிவகளை ஊராட்சி மன்றத் தலைவர் நாரயண பிள்ளை, துணை இயக்குநர் எஸ்.உமா, ரவீந்திரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பால.சக்திதாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக சமூக நலத்துறை அமைச்சர் சாயர்புரம் - சுப்பிரமணியபுரத்தில் பகுதி நேர நியாய விலைக் கடையை திறந்து வைத்தார். மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இணைப்பதிவாளர் (கூட்டுறவு) முருகன், நட்டாத்தி ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயக்குமார், பேரூராட்சி உறுப்பினர்கள் தங்கரதி, காசி, மரியசுந்தரம் உட்பட பொது மக்கள் கலந்து கொண்டனர்.

தகவல் : தூத்துக்குடி வெப்சைட்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin