வெள்ளி, 8 ஜனவரி, 2010

அபுதாபியில் இஸ்லாத்தை ஏற்ற பழனியப்பன்


அபுதாபி மண்டலத்தில் அமைந்திருக்கும் தாஸ் தீவில் வேலை பார்த்து வரும் தூத்துக்குடி முத்தையாபுரத்தைச் சார்ந்த சகோ.பழனியப்பன் கருப்பையா அவர்கள் திருமறைக்குர்ரானை படித்து அதன் மூலம் தெளிவு பெற்று தூய இஸ்லாத்தினை ஏற்க விரும்புவதாக அபுதாபி தமிழ்நாடு தவ்ஹீத ஜமாஅத் நிர்வாகிகளுக்கு தொலைபேசி மூலம் தெரிவித்தார்கள்.

சகோதரர் அவர்களுக்கு தக்க விளக்கம் அளிக்கப்பட்டதென் பேரில் தாஸ் தீவில் அமைந்திருக்கும் பள்ளிவாசலில் வைத்து 30/12/2009 அன்று இஸ்லாத்தினை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டு தனது பெயரை அப்ரதுர்ரஹீம் என் மாற்றிக்கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்…

இதனை தொடர்ந்து தாயகம் செல்வதற்காக 02/01/2010 அன்று அபுதாபி நகருக்கு வருகை தந்த சகோதரர் அவர்களை அபுதாபி தமிழ்நாடு தவ்ஹீத ஜமாஅத் சகோதரர்கள் நேரில் போய் சந்த்திதனர்.

சந்திப்பின் போது சகோதரர் அவர்களுக்கு ஏராளமான மார்க்க விளக்க புத்தகங்களும் குறுந்தகடுகளும் வழங்கப்பட்டது. மேலும் சகோதரர் அவர்கள் இஸ்லாத்தின் அடிப்படைகள் குறித்து கேட்ட கேள்விகளுக்கும் விளக்கம் கொடுக்கப்பட்டது.

மேலும் அவரிடம் “நீங்கள் எதனால் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டீர்கள்” என்று கேட்ட போது “ எனக்கு ஆரம்பம் முதலே கடவுள் மீது நம்பிக்கை இருந்தாலும், காலில் விழுவது , வரிசையில் இருந்து கடவுளை வணங்குவது என்பது போன்ற செயல்கள் எனக்கு பிடிக்கவில்லை என்றும் பகவத்கீதையை விட திருக் குர்ஆனைத்தான் நான் அதிகமாக படித்திருக்கின்றேன் என்றும், ஆயிரத்து நானுறு வருடத்திற்கு முன்பு இறக்கப்பட்ட குரான் இன்னமும் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் இருப்பதையும் அதை ஒரு எழுதப்படிக்க தெரியாத முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தாமாகவே இதை கட்டாயமாக எழுதியிருக்க முடியாது என்பதையும் சிந்தித்து இதுதான் ஒரு உண்மையான வேதம் என்று ஏற்றுக்கொண்டேன்” என்று கூறினார்.

நன்றி : அதிரை போஸ்ட்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin