வியாழன், 7 ஜனவரி, 2010

நெல்லையில் அறிவியல் கண்காட்சி ரயில்


திருநெல்வேலிக்கு வந்த அறிவியல் கண்காட்சி ரயிலை ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் புதன்கிழமை ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.

மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பக் கழகம் சார்பில் கடந்த அக்டோபர் 2-ம் தேதி காந்திநகரில் இருந்து இக்கண்காட்சி ரயில் புறப்பட்டது. வடமாநிலங்களில் உள்ள முக்கிய நகரங்களுக்கு சென்று விட்டு, இந்த ரயில் கடந்த 4-ம் தேதி திருவனந்தரம் வழியாக செவ்வாய்க்கிழமை திருநெல்வேலி ரயில் நிலையத்திற்கு வந்தது.

ரயில் நிலையத்தில் 5வது பிளாட்பாரத்தில் நிறுத்தப்பட்டுள்ள இந்த ரயிலில் உள்ள அறிவியல் கண்காட்சி அரங்கை மாவட்ட ஆட்சியர் மு. ஜெயராமன் திறந்துவைத்துப் பார்வையிட்டார்.

ரயில் நிலைய மேலாளர் கல்யாணி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பின்னர், பள்ளி மாணவ, மாணவிகள் வரிசையில் நின்று ரயிலில் உள்ள கண்காட்சி அரங்கை கண்டு ரசித்தனர்.

கண்காட்சியில் அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த அரிய தகவல்களுடன் அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன.

அனைத்து தகவல்கள், விளக்கங்கள், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் இடம் பெற்று இருந்தன. இதனால், பள்ளி மாணவிகள் அதைப் படித்து புரிவதற்கு மிகவும் சிரமப்பட்டனர்.

இந்த கண்காட்சி ரயிலில் அரங்கை பற்றி விளக்கிட 38 பேர் உள்ளனர். இவர்களில் 3 பேர் தமிழ் பேச தெரிந்தவர்கள். பெரும்பானவர்கள் இந்தி, ஆங்கிலத்தில் பேசியதால் மாணவர்கள் அவர்கள் கூறியதை புரிந்து கொள்ளுவதில் சிரமப்பட்டனர். மாணவர்களை அழைத்து வந்த ஆசிரியர்களும், மாணவர்களுடன் அரங்கை பார்த்து ரசித்து வந்தனர்.

இந்த கண்காட்சியை 8-ம் தேதி வரை பார்க்கலாம். அதன்பின் இந்த ரயில் திண்டுக்கல் செல்லும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin