வெள்ளி, 9 அக்டோபர், 2009

காப்பீட்டு திட்ட போட்டோ எடுக்கும் பணி ஸ்ரீவையில் இன்று துவக்கம்

ஸ்ரீவைகுண்டத்தில் கலைஞர் காப்பீட்டு திட்ட போட்டோ எடுக்கும் பணி இன்று நடக்கிறது.

ஸ்ரீவை., யில் இன்று காலை 9 மணி முதல் இர வு 9 மணிவரை வார்டு 1, 2, 3 ஆகிய பகுதிகளுக்கு ஹாஜி மியான் அப்துல் காதர் நடுநிலைப்பள்ளியிலும், வார்டு 4, 5, 6 ஆகிய பகுதிகளுக்கு குருசு கோயில் மண்டபத்திலும், வார்டு 7,8,9 ஆகிய பகுதிகளுக்கு குமரகுருபரர் சுவாமிகள் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், வார்டு 10,11,12 ஆகிய பகுதிகளுக்கு புதுக்குடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியிலும், வார்டு 13, 14, 15 ஆகிய பகுதிகளுக்கு ஊர �ட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிலும், வார்டு 16, 17, 18 ஆகிய பகுதிகளுக்கு உலகம்மாள் அண்ணி நினைவு நடுநிலைப்பள்ளியிலும் போட்டோ எடுக்கும் பணி நடக்கிறது.

முதியோர் உதவி தொகை பெருபவர்கள், விவசாய அட்டை வைத்திருப்பவர்கள், நலவாரிய உறுப்பினர்கள், குடும்ப வருடாந்திர வருமானம் ரூ. 72,0 00க்கும் கீழ் உள்ளவர்கள் ரேசன் கார்டு ஜெராக்ஸ் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வந்து போட்டோ எடுத்துக் கொள்ளலாம் என ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் பரமசிவன் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin