திங்கள், 17 ஆகஸ்ட், 2009

ஸ்ரீவைகுண்டத்தில் நெரிசலான இடத்தில் நீதிமன்றம்

ஸ்ரீவைகுண்டத்தில் உரிமையியல் நீதிமன்றம் பாலத்தை கடந்து ஊருக்குள் செல்லும் பாதையில் உள்ளது. குற்றவியல் நீதிமன்றம் பல ஆண்டாக பெருமாள்கோவில் அருகே செயல்பட்டு வந்தது.

"ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம்' என்ற குறிக்கோள் அடிப்படையில் உரிமையியல் நீதிமன்றம் உள்ள இடத்தில் குற்றவியல் நீதிமன்றத்தை மாற்றி உள்ளனர்.

இங்கு போதிய இடவசதி இல்லை. மழைக் காலத்தில் மேலும் பல இடர்பாடுகள் ஏற்படுகின்றன. எனவே, போதிய இடவசதி உள்ள இடத்தில் நீதிமன்றம் செயல்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தி.சேஷாத்ரி, ஆழ்வார்திருநகரி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin