செவ்வாய், 11 ஆகஸ்ட், 2009

ஸ்ரீவைகுண்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் பிரசாரம் செய்தார்.


ஸ்ரீவைகுண்டம் தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் எம்.பி. சுடலையாண்டியை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் திங்கள்கிழமை இரவு ஸ்ரீவைகுண்டத்தில் பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

தமிழ்நாட்டில் 2006 பொதுத் தேர்தலின்போது கொடுக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன.

வறுமையை ஒழிக்க ஊரக வேலை உறுதித் திட்டத்தை கொண்டுவந்தோம்.
இதன் மூலம் இன்னும் 10-15 ஆண்டுகளில் நாட்டில் வறுமை இல்லாத நிலை ஏற்படும்.
சிறுபான்மை மக்களைப் பாதுகாக்கும் கடமை பெரும்பான்மை மக்களுக்கு உள்ளது.

காங்கிரஸ் எப்போதும் சிறுபான்மை மக்களைப் பாதுகாக்கும் அரணாக செயல்படும்.
மத்திய, மாநில அரசின் நல்ல திட்டங்கள் தொடர காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்களியுங்கள்.
வேட்பாளர் சுடலையாண்டி ஸ்ரீவைகுண்டம் தொகுதி மக்கள் அனைவருக்கும் பொதுவானவராக செயல்படுவார் என்றார் அவர்.

பிரசாரத்தின்போது அமைச்சர்கள் டி.பி.எம். மைதீன்கான், கீதாஜீவன், தூத்துக்குடி தொகுதி எம்.பி. ஜெயதுரை, எம்.எல்.ஏ.க்கள் அப்பாவு, வீ. கருப்பசாமிபாண்டியன், திருநெல்வேலி மாநகர மேயர் அ.லெ. சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin