துபாயில் இந்திய சமூக நல கமிட்டி மற்றும் அல் வாஸல் மருத்துவமனை ஆதரவுடன் இந்திய கன்சுலேட்டில் ஆகஸ்ட் 5 புதன்கிழமை காலை காலை 9 மணி முதல் மதியம் 2.30 மணி வரை நடைபெறுகிறது.
இதன் மூலம் சேகரிக்கப்படும் ரத்தம் தலசீமியா எனும் குறைபாடால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஒவ்வொரு மூன்று முதல் நான்கு வாரங்களுக்கு ஒரு முறை மாற்றப்படுவதற்கும், மேலும் அறுவை சிகிச்சை மற்றும் விபத்து கால சிகிச்சைகளுக்கும் பயன்படுத்தப்படும்.
இத்தகைய மனிதாபிமான பணிகளுக்கு பயன்படும் ரத்தத்தை மனிதாபிமான அடிப்படையில் ரத்ததானம் வழங்கிட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஈமான் அமைப்பு இந்திய சமூக நல கமிட்டியின் நிறுவன உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
விபரங்களுக்கு: முகம்மத் தாஹாவை 050 467 43 99 / 050 25 33 712 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக