வியாழன், 13 ஆகஸ்ட், 2009

ஸ்ரீவை. அரசியல் கட்சியினர் மீது 81 வழக்கு: தேர்தல் கமிஷன் அதிரடி

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் தேர்தல் விதிமுறைகளை மீறிய அரசியல் கட்சியினர் மீது தேர்தல் கமிஷன் அதிரடியாக 81 வழக்குகளை பதிவு செய்துள்ளனர். இதனால், அனைத்து கட்சியினரும் பெரும் கலக்கமடைந்துள்ளனர்.

ஸ்ரீவைகுண்டம் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 18ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், தற்போது அதிமுக., கூட்டணியில் உள்ள மதிமுக., பா.ம.க., போன்ற கட்சிகளை தவிர மற்ற அனைத்து கட்சிகளும் வரிந்து கட்டிக் கொண்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகின்றன.

பொதுவாக, இடைத்தேர்தல் பணிக்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்துள்ள தொண்டர்கள் தொகுதியினை பல்வேறு பகுதிகளாக பிரித்து தேர்தல் வேலை செய்து வருகின்றனர். அதுபோல், தொண்டர்களை உற்சாகம் படுத்தும் விதமாக ஓவ்வொரு நாளும் தலைவர்கள் தொகுதியில் ஓட்டு வேட்டையாடி வருகின்றனர்.

இப்படி, தேர்தல் பிரச்சாரம் களைகட்டி வரும்நிலையில், தொகுதியில் தேர்தல் கமிஷன் தேர்தல் விதிமுறைகளை மீறும் அரசியல் கட்சியினர் மீது அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் தேர்தல் விதிமுறை மீறியதாக 81 வழக்குகள் அதிரடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதில், திமுக மீது 30, காங்கிரஸ் 12, தேமுதிக 28, புதிய தமிழகம் கட்சி 5, சிபிஐ 3, சுயேட்சை 1, சட்டம் ஓழுங்கு சீர்கேடு சம்பந்தமாக 2 என, வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தேர்தல் நெறுங்கி வரும் நிலையில் தேர்தல் கமிஷன் அதிரடியாக வழக்குகளை அரசியல் கட்சியினர் மீது பதிவு செய்து வருவதால் அரசியல் கட்சியினர் கலக்கமடைந்துள்ளனர்.

நன்றி :சக்திமுருகன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin