இந்திய அரசு நிறுவனமான பிஎஸ்என்எல்லின் 3 ஜி சேவைக்கு இதுவரை 40000 வாடிக்கையாளர்கள் சேர்ந்துள்ளனர்.
வீடியோ காலிங், வீடியோ கான்பரென்ஸிங், மொபைல் டிவி, பிராட்பேண்ட், வீடியோ ஸ்க்ரீனிங், முழுமையான இசை பதிவிறக்கம் என ஏராளமான வசதிகளை உள்ளடக்கிய சேவைதான் 3ஜி. இந்த சேவையை பிஎஸ்என்எல் முழுமையாகத் தருகிறது... அதுவும் குறைந்த கட்டணத்தில்.
ரூ.120 கட்டினால் போதும் பிரீபெய்டில் இந்த சேவையைப் பெறலாம். போஸ்ட் பெய்டு என்றால் ரூ.225. 3 ஜி சிம் கார்டுக்கு தனியாக ரூ.59 செலுத்த வேண்டும். இந்த சேவையைப் பெற்ற ஒரு மாத காலம் வரை இலவச வீடியோ கால்களைப் பேசிக் கொள்ளும் சலுகையைத் தருகிறது பிஎஸ்என்எல்.
அதேபோல முன்பு பிஎஸ்என்எல் சாதாரண மொபைல் சேவையைப் பெற்றவர்களும் இனி இந்த 3ஜி சேவைக்கு மாறிக் கொள்ளும் வசதியும் உள்ளது.
இந்த 3ஜி சேவைக்கு மட்டும் இதுவரை 40000 சந்தாரர்கள் சேர்ந்துள்ளதாக பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக