ஸ்ரீவை மக்களை பற்றியும் ஊர் நடப்புகளையும் தெரிந்து கொள்ளலாம்,உங்களுடைய கருத்துகளையும் பதிவு செய்யலாம்..
திங்கள், 13 ஜூலை, 2009
ஸ்ரீவைகுண்டம் இடைத் தேர்தல்: வெப்கேமரா மூலம் நேரடி கண்காணிப்பு
ஸ்ரீவைகுண்டம் சட்ட மன்ற தொகுதி இடைதேர்தல் வாக்குப்பதிவை வெப் கேமரா மூலம் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி செல்வராஜ் சமீபத்தில் காலமானார். இதனால் இத்தொகுதியில் இடைத் தேர்தல் இன்னும் ஒரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆனையர் நரேஷ் குப்தா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் கோ.பிரகாஷ், ஸ்ரீவைகுண்டம் இடைத் தேர்தலுக்கான பணிகள் தற்போது துவக்கப்பட்டுள்ளன. 2006ம் ஆண்டு தேர்தல் விதிமுறையின்படியே இந்த இடைத் தேர்தல் நடைபெறும். 172 வாக்கு மையங்களில் வெப் கேமரா மூலம் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக தேர்தல் ஆனையத்தின் தனி இனையதள சர்வர் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சென்னையில் இருந்தவாறே தேர்தல் வாக்குப்பதிவு கண்காணிக்கப்படும்.
வாக்குப் பதிவு இயந்திரங்கள் சாயர்புரம் போப் கல்லூரியில் வைக்கப்படும். அங்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். ஸ்ரீவைகுண்டம் வாக்குப் பதிவை 100சதவீதம் கேமரா மூலம் வீடியோ பதிவு செய்யப்படும் என ஆட்சியர் கோ.பிரகாஷ் தெரிவித்தார்.
Thanks To Sakthi - Tuticorin Web
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக