டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில், பி.இ.-பி. டெக் படிப்புகள், கட்டிடவியல், இயந்திரவியல்¢, மின்னியல் மற்றும் மின்னணு வியல், மின்னணுவியல் மற்றும் தொடர்பியல், கணினி பொறியியல் மற்றும் தகவல் தொடர்பியல் ஆகிய 6 துறைகளுடனும், முதுநிலை வகுப்புகள் (பி.ஜி.கோர்ஸ்) எம்.இ. (சி.எஸ்.இ), எம்.பி.ஏ. ஆகிய துறைகளிலும் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டு முதல், இந்த கல்லூரியில் முதுநிலை கணினி பயன்பாட்டியல் (எம்.சி.ஏ.) படிப்பு தொடங்குவதற்கு, டெல்லியில் உள்ள அகில இந்திய தொழில்நுட்ப கழகம் அனுமதி அளித்து உள்ளது. அதன்படி 60 மாணவ - மாணவிகள் இந்த வகுப்பில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் இந்த ஆண்டு முதல் எம்.சி.ஏ. பட்ட மேற்படிப்பும் வழங்கப்படுவது, திருச்செந்தூர் வட்டார, தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும்.
தகுதி வாய்ந்த மற்றும் அனுபவமிக்க பேராசிரியர்கள் வகுப்பை நடத்த உள்ளனர். மிகச்சிறந்த கணினி ஆய்வகம் மற்றும் நூலகம் கல்லூரியில் அமைந்துள்ளன. மாணவ மாணவியர்களுக்கு தனித்தனியே விடுதி வசதிகள் கல்லூரி வளாகத்திலேயே இயங்கி வருகின்றன.
திருநெல்வேலி, தூத்துக்குடி, சாயர்புரம் மற்றும் திசையன்விளை ஆகிய ஊர்களுக்கு கல்லூரி பேருந்து வசதி உள்ளது.
எம்.சி.ஏ. படிப்பு குறித்து அறிய ஆர்வமுள்ள மாணவ, மாணவியர்கள் மற்றும் பெற்றோர்கள் கல்லூரி முதல்வர் மற்றும் கல்லூரி செயலரை கீழ்கண்ட தொலைபேசி எண்களில் (04639 - 245854, 245908, 242482) அல்லது திருச்செந்தூர் நிர்வாக அலுவலரை 04639-243499, 242721 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று, கல்லூரி செயலாளர் டாக்டர் என்.தாணுலிங்கம் தெரிவித்து இருக்கிறார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக