புதன், 15 ஜூலை, 2009

தூத்துக்குடியில் இணையதள நிலையங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்: எஸ்பி தகவல்



இணையதளம் மூலம் நடைபெறும் சட்ட விரோத நடவடிக்கைகளை தடுக்க, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து இன்டர்நெட் சென்டர் உரிமையாளர்களுக்கும் புதிய ஆலோசனை மற்றும் உத்தரவுகளை எஸ்பி., செந்தில்குமார் தெரிவித்தார்


1. ஒவ்வொரு இணையதள நிலையத்திலும் வருகை பதிவேடு கண்டிப்பாக பராமரிக்க வேண்டும். அதில் இணையதளம் உபயோகிக்க வருபவர்களின் முழு விபரங்கள் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும்.

2. இணைய தள உபயோகிப்பாளர் தெளிவான புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும்.

3. இளையதள உரிமையாளர், நிலையத்தில் நுழையும் வாடிக்கையாளர்களின் உருவம் மற்றும் முகம் தெளிவாக பதியும் வகையில் சிசிடிவி கேமரா மற்றும் வலை கேமரா பொருத்த வேண்டும்.

4. இணையதள நிலையம் நடத்த முறையான உரிமம் கண்டிப்பாக பெற வேண்டும். மேலும் ஆண்டுதோறும் புதுப்பிக்கப்பட வேண்டும்.

5. தேவையற்ற வலைதளங்களை பார்வையிடுவதைத் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

6. இணைய தள நிலைய்ங்களில் மூடிய கதவுகளுடன் உள்ள தடுப்பறைகளை உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும்.

7. இணையதள கணினி உபயோகிப்பவர் பயன்படுத்திய URL, வலைதளம் ஆகியவற்றை பதிவு செய்ய சிறப்பு மென்பொருளை கணினியில் பயன்படுத்த வேண்டும்.

8. புகைப்படம் இல்லாத இணையதள உபயோகதாரரை வலை கேமரா மூலம் புகைப்படம் எடுத்து, கணினியில் பதிவு செய்ய வேண்டும்.

9. அனைத்து இணையதள நிலையங்களும் காலை 8 மணி முதல் இரவு 11 மணி வரை மட்டுமே இயக்கப்பட வேண்டும். அதிகமாக தேவைப்படும் நேரங்களில் சிறப்பு அனுமதி பெற வேண்டும்.

10. காவல்துறை அதிகாரிகள் இணையதள நிலையங்களை பார்வையிட வரும்போது, இணையதள நிலையத்தார் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். உட்பட பல்வேறு ஆலோசனைகளும் அறிவுரைகளும் வழங்கப்பட்டுள்ளன.

நன்றி : சக்திமுருகன், தூத்துக்குடி இணையதளம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin