புதன், 15 ஜூலை, 2009

சென்னை உயர்நீதிமன்றம் : 117 வயதாகிறது


சென்னை உயர்நீதிமன்றம் (12.07.09) தனது 117வது வயதில் அடியெடுத்து வைத்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் 1862 ஆம் ஆண்டு ஜூன் 26ம் தேதி, அமையப்பெற்றது .

அப்பொழுது இந்தியாவை ஆண்ட இங்கிலாந்து ராணி விக்டோ ரியா மகாராணியின் ஆணைப்படி சென்னை, கொல்கத்தா மற்றும் மும்பையில் உயர்நீதிமன்ங்கள் அமைக்கப்பட்டன.

சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிகார வரம்பு, தமிழகம் மற்றும் புதுச்சேரியை உள்ளடக்கியது. 1996 ஆம் ஆண்டு, மெட்ராஸ் என்று இருந்த பெயர், சென்னை என்று மாற்றம் செய்யப்பட்டது. ஆனால், சில நிர்வாக, சட்டரீதியான நடைமுறைகளுக்காக, மெட்ராஸ் ஹைகோர்ட் என்ற பெயரிலேயே செயல்பட்டு வருகிறது.


இந்த நீதிமன்றத்தில் இந்தியாவைச் சேர்ந்த முதல் நீதிபதிகளாக முத்துசுவாமி அய்யர், கிருஷ்ணசாமி அய்யர் மற்றும் சுந்தர அய்யர் பதவி வகித்தனர். ஆண்டு விழாவின் முக்கியத்துவத்தைக் கருதி, தற்போதைய தலைமை நீதிபதி ஹெச் எல் கோகலே, சென்னை உயர்நீதிமன்ற கட்டடத்தின் முகப்பிற்கு விளக்கு தோரணங்கள் அமைக்க உத்தரவிட்டார்.

மேலும், மத்திய அரசிடமிருந்து வழங்கப்பட்ட 50 லட்சம் ரூபாயைக் கொண்டு கட்டடத்தின் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

தற்போது தலைமை நீதிபதியுடன் சிவில், கிரிமினல் மற்றும் ரிட் பிரிவுகளை கவனிக்கும் 57 நீதிபதிகள் பணியாற்றுகின்றனர். சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை, 2004ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin