வியாழன், 16 ஜூலை, 2009

ராணுவ ஆள்சேர்க்கை முகாம் தூத்துக்குடி, நெல்லை இளைஞர்களுக்கு வாய்ப்பு

திருச்சி அண்ணா திடலில் வருகிற 20ந் தேதி முதல் 25ந்தேதி வரை ராணுவத்திற்கான ஆள் சேர்க்கை முகாம் நடைபெறுகிறது.

இதில் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, பெரம்பலூர், திருச்சி, கரூர், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய 14 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியை சேர்ந்த தகுதியானவர்கள் இதில் பங்கு பெறலாம்.

இது தொடர்பாக நாகர்கோவில் முன்னாள் படைவீரர் நலன் உதவி இயக்குநர் மேஜர் எஸ். ஜெயகர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இம் முகாமில் சிப்பாய் டெக்னிக்கல் நர்சிங் உதவியாளர் (பொதுப் பணி) தொழில் நுணுக்கமறிந்தவர் கிளர்க், ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் ஆகிய படைப்பணி பிரிவுகளுக்கு தேர்வுகள் நடைபெறுகிறது.

சிப்பாய் டெக்கனிக்கல் மற்றும் நர்சிங் உதவியாளர் பணிக்கு 12-ம் வகுப்பு தேர்வில் அறிவியல், வேதியியல், கணிதம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடப் பிரிவுகள் எடுத்து 50 சதவிகிதத்துக்கு குறையாமல் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சிப்பாய் கிளார்க் மற்றும் ஸ்டோர் கீப்பர் பணியிடத்துக்கு பிளஸ் 2 இன்டர் மீடியட் தேர்வில் கலை, அறிவியல், பொருளாதாரம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடப் பிரிவுகள் எடுத்து 50 சதவிகிதம் மதிப்பெண்களுக்கு குறையாமல் பெற்று வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

சிப்பாய் தொழில் நுணுக்கம் அறிந்தவர் பணிக்கு எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இப் பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் பதினேழரை வயது முதல் 23 வயதுக்கு உள்பட்டவராக இருக்க வேண்டும்.

சிப்பாய் பொதுப் பிரிவுக்கு எஸ்எஸ்எல்சியில் 45 சதவிகிதம் மதிப்பெண்களுக்கு குறையாமல் பெற்று வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

இது தொடர்பாக மேலும் விவரங்களுக்கு நாகர்கோவில் முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்றார் ஜெயகர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin