புதன், 15 ஜூலை, 2009

ஸ்ரீவைகுண்டம் இடைத் தேர்தலுக்கு துணை ராணுவம்: மத்திய அரசு ஊழியர்கள்- நரேஷ் குப்தா


தமிழக சட்டசபை இடைத் தேர்தல் பாதுகாப்புக்கு முழுக்க முழுக்க துணை ராணுவமே பயன்படுத்தப்படும். அதேபோல வாக்குச் சாவடிகளில் மத்திய அரசு ஊழியர்களே பயன்படுத்தப்படுவார்கள் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் காலியாகவுள்ள தொண்டாமுத்தூர், பர்கூர், இளையாங்குடி, கம்பம், ஸ்ரீவைகுண்டம் ஆகிய சட்டசபைத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடத்தப்படவுள்ளது. இதற்கான தேதி எந்த நேரத்திலும் வெளியாகும் எனத் தெரிகிறது.

தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட தொகுதிகளின் தேர்தல் அதிகாரிகளுடன் நரேஷ் குப்தா ஆலோசனை நடத்தி வருகிறார்.

இன்று சென்னையில், பர்கூர் தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணகிரி, ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்குட்பட்ட தூத்துக்குடி மாவட்ட கலெக்டர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம்தான் அறிவிக்கும். விரைவில் அறிவிக்கப்படும்.

துணை ராணுவத்தை தேர்தல் பாதுகாப்புப் பணிக்கு பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளோம்.

அதேபோல வாக்குச் சாவடிகளி்ல் முழுமையாக மத்திய அரசு ஊழியர்களை நியமிக்கவுள்ளோம்.

வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கப்படுவதை ஒழிக்க வேண்டுமானால், வாக்காளர்களே பணத்தை வாங்காமல் இருக்க வேண்டியது அவசியம்.

தேர்தல் முடிவுகளை எஸ்.எம்.எஸ். மூலம் அறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார் குப்தா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin