ஸ்ரீவை மக்களை பற்றியும் ஊர் நடப்புகளையும் தெரிந்து கொள்ளலாம்,உங்களுடைய கருத்துகளையும் பதிவு செய்யலாம்..
புதன், 15 ஜூலை, 2009
'விண்டோஸ் 7 வேண்டாம்': சர்வே முடிவு
சான்பிரான்ஸிஸ்கோ: முன்பு எதற்கெடுத்தாலும் மைக்ரோசாப்டையே நிறுவனங்கள் நம்பிக் கொண்டிருந்தது ஒரு காலம். ஆனால் இப்போது போட்டிக்கு ஏகப்பட்ட நிறுவனங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.
இதன் விளைவு, விஸ்டாவுக்குப் பிறகு மைக்ரோசாப்ட் புதிதாக அறிமுகப்படுத்திய 'விண்டோஸ் 7' ஆபரேடிங் சிஸ்டத்தை பெரும்பாலான நிறுவனங்கள் புறக்கணிக்க ஆரம்பித்துவிட்டன.
10க்கு 7 நிறுவனங்கள் விண்டோஸ் 7 வேண்டவே வேண்டாம் என கருத்து தெரிவித்துள்ளதாக ஒரு சர்வே தெரிவிக்கிறது.
அதிக செலவு, மேம்படுத்த நேரமின்மை போன்ற காரணங்கள் சொல்லப்பட்டாலும், இந்த சிஸ்டத்தில் சில குறைபாடுகள் இருப்பதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளன.
விஸ்டாவுக்கு மாறிய பல நிறுவனங்கள் அதையும் வேண்டாம் என்று கூறிவிட்டு மீண்டும் விண்டோஸ் எக்ஸ்பிக்கே திரும்பிவிட்டதும் நடக்கிறது.
மைக்ரோசாப்டின் நீண்ட நாள் வர்த்தக பங்காளியான இன்டல் நிறுவனம் கூட விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 நிலையற்றதன்மை கொண்டிருப்பதாகக் கூறி, மீண்டும் எக்ஸ்பிக்குத் திரும்பிவிட்டது.
இன்னொரு பக்கம் கூகுள் நிறுவனத்தின் புதிய இயங்கு மென்பொருளான ஓ.எஸ். பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டுகின்றனர் பயனாளர்கள்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக