ஸ்ரீவை மக்களை பற்றியும் ஊர் நடப்புகளையும் தெரிந்து கொள்ளலாம்,உங்களுடைய கருத்துகளையும் பதிவு செய்யலாம்..
வியாழன், 18 ஜூன், 2009
தனி அடையாளக் குறியீட்டெண் இல்லாத மொபைல் ஃபோன்களை இறக்குமதி செய்யத் தடை
சீனாவிலிருந்து மொபைல் போன்கள், பால் பொருட்கள் மற்றும் பொம்மைகள் போன்றவற்றை இறக்குமதி செய்ய இந்திய அரசு தடை விதித்துள்ளது.
இதனால் சர்வதேச வர்த்தக அமைப்பில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் கடுமையான மோதல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
உள்நாட்டு உற்பத்தி மற்றும் வர்த்தகத்தை அழிக்கும் வகையில் இந்த இறக்குமதி அமைந்துள்ளதாகவும், அதைத் தவிர்க்கவும் இந்தத் தடையை விதித்துள்ளதாக இந்திய அயல் வர்த்தகத் துறை அறிவித்துள்ளது.
குறிப்பாக சீனாவிலிருந்து சர்வதேச அடையாளக் குறிப்பெண்கள் (International Mobile Equipment Identity) இல்லாமல் மாதத்துக்கு 8 லட்சம் மொபைல் போன்களுக்கும் அதிகமாக இறக்குமதி செய்யப்பட்டு வந்தது. இன்றும் 50 லட்சத்துக்கும் இத்தகைய போன்கள் புழக்கத்தில் உள்ளன.
ஐஎம்ஈஐ எனப்படும் தனி அடையாள குறியீட்டெண் இல்லாத மொபைல் ஃபோன்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது.
ஐஎம்ஈஐ இல்லாத மொபைல் ஃபோன்களைப் பயன்படுத்துபவரைக் கண்டுபிடிப்பதில் சிரமம் உள்ளதால் தடை விதிக்கப்படுவதாகவும், இந்தத் தடை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் தனது அறிவிக்கையில் கூறியுள்ளது.
ஐஎம்ஈஐ என்பது 15 இலக்க அடையாளக் குறியீட்டெண்ணைக் கொண்டது. இந்த எண் இல்லாத மொபைல் ஃபோன்கள் நாட்டின் பாதுகாப்புக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாகக் கருதப்படுகிறது. தேசிய பாதுகாப்பை கருத்தில்கொண்டு ஐஎம்ஈஐ எண் இல்லாத மொபைல் ஃபோன்களின் சேவைகளை ரத்து செய்யுமாறு செல்போன் ஆபரேட்டர்களை தொலைத்தொடர்புத் துறை முன்னதாக கேட்டுக்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக