செவ்வாய், 9 ஜூன், 2009

பழைய செல்போன் மறு சுழற்சி:நோக்கியா


பழைய செல்போன்களை மறுசுழற்சி செய்யும் திட்டத்தை நோக்கியா செல்போன் நிறுவனம் சென்னையில் நேற்று அறிமுகம் செய்துள்ளது

இது குறித்து, நோக்கியா இந்தியா நிறுவனத்தின் கம்பெனி விவகாரத்துறை இயக்குநர் அம்பரீஷ் பகாயா கூறும் போது, இந்தியாவில் சென்னை, கோவை, ஹைதராபாத், பெங்களூர், மும்பை, தில்லி உள்ளிட்ட 15 பெரிய நகரங்களில், பழைய செல்போன் மறுசுழற்சித் திட்டத்தை நோக்கியா செல்போன் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

ஜூலை மாதம் முதல் செயல்பட உள்ள இத்திட்டத்திற்காக நோக்கியா கேர் மையங்கள் மற்றும் டீலர்களிடம் மறுசுழற்சிக்கான பெட்டி வைக்கப்பட்டுள்ளன. இதில் எல்லா கம்பெனி பழைய செல்போன்களையும் போடலாம். இந்த மறுசுழற்சி பெட்டி உள்ள வைக்கப்பட்டுள்ள இடத்தை அறிந்து கொள்ள 55555 என்ற எண்ணுக்கு GREEN என்று குறுஞ்செய்தி அனுப்பி தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin