முறப்பநாடு அருகே உள்ள செங்கல்பட்டியை சேர்ந்தவர் பழனி சண்முகத்தேவர். இவரது மகன் முத்துக்குமார் (வயது35) ஒரு வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
அந்த வழக்கு விசாரணை இன்று ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டில் நடந்து வருகிறது. இதில் ஆஜர் ஆவதற்காக முத்துக்குமார் இன்று காலை ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டுக்கு வந்தார்.
அந்த சமயத்தில் 2 மோட்டார் சைக்கிளில் 4 பேர் அவரை நோக்கி வந்தனர்.
அவர்களை பார்த்ததும் முத்துக்குமார் ஓட்டம் பிடித்தார். மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் துரத்தி சென்று பஸ் நிலையம் அருகே (தீயணைப்பு நிலையத்தை தாண்டி) மடக்கி, முத்துக்குமார் தலைமுடியை பிடித்து இழுத்து கீழே சாய்த்தனர்.
உடனே அந்த கும்பல் மறைத்து வைத்து இருந்த அரிவாளை எடுத்து வெட்டினர். இதில் முத்துக்குமார் கை மற்றும் விரல்கள் துண்டானது.
சரமாரியாக வெட்டு விழுந்ததால் தலை 2 ஆக பிளந்தது. இதனால் ரத்த வெள்ளத்தில் அவர் பரிதாபமாக இறந்தார்.
பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பீதி ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் ஸ்ரீவைகுண்டம் இன்ஸ்பெக்டர் நடராஜன், சப்- இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலையாளிகள் யார்? எதற்காக கொலை செய்தார்கள் என்று தெரியவில்லை.
தப்பி ஓடிய அவர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.
தகவல் : மாலைமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக