காயல்பட்டினம் இக்ரா கல்வி சங்க வளர்ச்சிக்காக அமெரிக்காவில் பணியாற்றும் காயல்பட்டினத்தைச் சேர்ந்த இளைஞர் நிதி உதவி செய்துள்ளார்.
இக்ரா கல்வி சங்கம் மற்றும் தி பர்ஸ்ட் டிரஸ்ட் ஆகியவை இணைந்து மாநிலத்தின் முதல் மாணவரை காயல்பட்டினத்துக்கு வர வைத்து நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர்.
இந்த ஆண்டு நிகழ்ச்சியை ஜூன் 28-ம் தேதி நடத்த முடிவு செய்துள்ளனர்.
இதற்கான ஆலோசனைக் கூட்டம் இக்ரா கல்வி சங்க வளாகத்தில் தலைவர் வாவு காதர் தலைமையில் நடைபெற்றது. செயலர் ஏ.தர்வேஷ் முஹம்மத், துணைச் செயலர் எஸ்.கே.ஸôலிஹ், சிங்கப்பூர் காயல் நல மன்றத் தலைவர் பாளையம் முஹம்மத் ஹஸன், இலங்கை காயல் நலமன்ற துணைச் செயலர் பி.எம்.ரபீக், பாங்காக் காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவைத் தலைவர் எம்.எம்.உவைஸ், ஷம்சுத்தீன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதில், அமெரிக்காவில் பணியாற்றும் காயல்பட்டினத்தைச் சேர்ந்த சாளை முஹம்மத் முஹியித்தீன் ரூ. 25 ஆயிரம் நிதியை இக்ரா கல்வி சங்க நிர்வாகப் பணிக்காக வழங்கினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக