தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 5 மாதத்திற்குள் தற்கொலை மற்றும் விபத்துக்கள் மூலம் 263 பேர் இறந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தினந்தோறும் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. இது போலீசாருக்கும், பொது மக்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக கடந்த ஜனவரி மாதத்தில் 8 பேர் தூக்குப்போட்டும், 12 பேர் விஷம் குடித்தும், 22 பேர் விபத்து மற்றும் உடலில் தீவைத்து இறந்துள்ளனர். பிப்ரவரி மாதத்தில் 14 பேர் தூக்கு போட்டும், 11 பேர் விஷம் குடித்தும், 23 பேர் விபத்து போன்றவற்றிலும், மார்ச் மாதம் 19 பேர் தூக்கு போட்டும், 16 பேர் விஷம் குடித்தும், 25 பேர் விபத்து போன்றவற்றிலும், ஏப்ரல் மாதம் 17 பேர் தூக்கு போட்டும், 14 பேர் விஷம் குடித்தும், 19 பேர் விபத்து போன்றவற்றிலும், இந்த மே மாதத்தில் இதுவரை 11 பேர் தூக்கு போட்டும், 19 பேர் விஷம் குடித்தும், 22 பேர் விபத்து போன்ற வற்றிலும் இறந்துள்ளனர்.
இந்தாண்டு துவக்கத்தில் இருந்து தற்கொலை சம்பவங்கள் அதிகமாக நடந்து வருகிறது. குறிப்பாக பெண்கள் அதிகளவில் தற்கொலை செய்து கொள்கின்றனர். மேலும் விபத்து போன்ற காரணங்களாலும் நாளுக்கு நாள் இறப்பு விகிதம் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் மனரீதியாக பாதிப்பிற்கு அதிகளவில் உள்ளவாதால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு வரும் இளைய சமூகத்திருக்கு உளவியல் ரிதியான பயிற்சியை அளிக்கவேண்டும் என்று மனநல நிபுணர்கள் விரும்புகின்றனர். அதிலும் பள்ளி மாணவர்களிடையே ஏற்படும் மனமாற்றம் தற்போது அதிகமாக நிகழ்ந்து வருவதை குழந்தைகளின் பெற்றோர்கள் கவனித்து அதற்கான காரணத்தை கண்டறிய வேண்டும் என்றும் அதனை தடுக்க தவறினால் பெரும்பான்மையான குழந்தைகள் மனஉளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை போன்ற முயற்சிக்கு சென்று விடுகின்றன என்றும் தெரிவித்தனர்.
இந்த நிலை நீடிக்காமல் இருக்கவேண்டுமானால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மனவளம், மனநலம் பற்றிய கலந்தாய்வுகள் நடத்தப்பட்டு மாணவர்களின் மன உளைச்சலை நீக்க வழிமுறை காணவேண்டும்.
தகவல் :

தகவல் : தூத்துக்குடி வெப் சைட்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக