சனி, 16 மே, 2009

மக்களவைத் தேர்தல்: இன்று முடிவு

15ஆவது மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 5 கட்டங்களாக நடைபெற்று முடிந்த்து. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது.

மொத்தம் 543 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

இதில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது.

வாக்கு எண்ணிக்கை இன்று காலை சரியாக 8 மணிக்குத் தொடங்குகிறது.

முடிவுகளை உடனுக்குடன் வெளியிட தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin