அரசு விரைவு பஸ்களில் சாட்டிலைட் டெலிவிஷன் விரைவில் அறிமுகப்படுத்தப்படுகிறது. தொலைதூர பஸ்களில் பயணம் செய்பவர்களின் பொழுது போக்குக்காக பஸ்களில் வீடியோ பொருத்தப்பட்டது. வீடியோவில் குறிப்பிட்ட படங்களின் கேசட்டுகள் மட்டும் திரும்ப திரும்ப ஒளிபரப்பப்படும். இதனால் பயணிகளுக்கு சலிப்பு ஏற்பட்டது.
இப்போது பயணிகளை மகிழ்விக்க சாட்டிலைட் டெலிவிஷன் வருகிறது. இதற்காக தனியாக டி.வி.க்கள் பஸ்களில் பொருத்தப்படும். கம்ப்யூட்டர் மூலம் பதிவு செய்யப்பட்டு காட்சிகளை சென்னையில் உள்ள கட்டுப்பாட்ட அறையில் இருந்து ஒளிபரப்புவார்கள்.
சாட்டிலைட் மூலம் மாநிலம் முழுவதும் அனைத்து பஸ்களிலும் இது தெரியும். டி.வி.டி. பராமரிப்பு, சி.டி.பிளேயர் பராமரிப்பு போன்ற செலவுகள் மிச்சப்படும். விளம்பரங்கள் மூலம் போக்குவரத்து கழகத்துக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும். தனியார் நிறுவனம் மூலம் பஸ்களில் இந்த வசதி செய்யப்படுகிறது.
தற்போது மதுரை, விழுப்புரம், சேலம், கோவை கோட்டங்களை சேர்ந்த 32 பஸ்களில் சாட்டிலைட் டெலிவிஷன் பொருத் தப்பட்டு சோதனை முறையில் ஒளிபரப்பப்படுகிறது. காட்சிகள் துல்லியாகவும், தெளிவாகவும் இருப்பதாக பயணிகள் தெரிவித்துள்ளனர். விரைவில் சாட்டிலைட் டி.வி.யை அறிமுகப்படுத்த உள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக