ஞாயிறு, 17 மே, 2009

குமரி தொகுதி முதல் திமுக எம்.பி. ஹெலன் டேவிட்சன்

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் முதன் முறையாக திமுக வெற்றிபெற்றுள்ளது. இக் கட்சி வேட்பாளர் ஜெ. ஹெலன் டேவிட்சன் 3,20,161 வாக்குகள் பெற்றுள்ளார்.

இவருக்கு அடுத்ததாக பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன் 2,54,474 வாக்குகள் பெற்று 2-வது இடம் பெற்றார்.

இத் தொகுதியில் போட்டியிட்ட 22 வேட்பாளர்களில் 20 வேட்பாளர்கள் டெபாசிட் தொகையை இழந்தனர். இவர்களில் மார்க்சீய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஏ.வி. பெல்லார்மின், தேமுதிக வேட்பாளர் எஸ். ஆஸ்டின், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் பி. சிவகாமி ஆகியோர் முக்கிய வேட்பாளர்கள்.
தமிழகத்தின் கடைகோடி தொகுதியான கன்னியாகுமரியில் நாகர்கோவில், கன்னியாகுமரி, குளச்சல், பத்மநாபபுரம், கிள்ளியூர், விளவங்கோடு ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன.

நாகர்கோவில் தொகுதியாக இருந்து தொகுதி மறுசீரமைப்புக்குப் பின் கன்னியாகுமரி தொகுதியாக மாறிய இத் தொகுதியில் மொத்த வாக்காளர்கள்- 11,78,047. இவர்களில், ஆண்கள்- 5,98,809, பெண்கள்- 5,79,238.
இத் தொகுதிக்கான தேர்தல் வாக்குப்பதிவு 1357 வாக்குச்சாவடிகளில் கடந்த புதன்கிழமை நடைபெற்றது. மாவட்டத்தில் மொத்தம் 7,65,663 வாக்குகள் பதிவாகியிருந்தன. வாக்குப்பதிவு சதவிகிதம்- 64.50.

பதிவான வாக்குகளும், தபால் வாக்குகளும் நாகர்கோவில் கோணம் அரசு தொழில்நுட்பக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த பாதுகாப்புக்கிடையே சனிக்கிழமை சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக எண்ணப்பட்டன. திமுக வேட்பாளர் ஹெலன்டேவிட்சன் 65687 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் பெற்ற மொத்த வாக்குகள்- 3,20,161.
அவருக்கு அடுத்ததாக பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன் 2,54,474 வாக்குகள் பெற்றார். இதுவரை மக்களவை உறுப்பினராக இருந்த மார்க்சீய கம்யூனிஸ்ட், அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.வி. பெல்லார்மின் 85,583 வாக்குகள் பெற்று 3-வது இடத்தையும், தேமுதிக வேட்பாளர் எஸ். ஆஸ்டின் 68,472 வாக்குகள் பெற்று 4-வது இடத்தையும், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் பி. சிவகாமி 6,400 வாக்குகள் பெற்று 5-வது இடத்தையும் பெற்றனர்.
மற்ற வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்: டி. அருள்துமிலன் (லோக் ஜனசக்தி கட்சி)- 2,812, சுயேச்சைகள் சி.பி. ராதாகிருஷ்ணன்- 525, சி.எம். பால்ராஜ்- 619, சீ. ராதாகிருஷ்ணன்- 4,400, சு. லட்சுமணன்- 1,065, கே. வேணு- 3,182, ஐ. வில்சன்- 2,925, சி. தங்கமணி- 1,266, டி. பாலசுப்பிரமணியன்- 1,698, எஸ். ஜான்சன்- 764, எமி- 445, சி. குமார்- 333, சி. நல்லதம்பி- 2448, சி. சதீஷ்- 762, எஸ். சிவகுமார்- 996, கே. ஜெயசிங்- 1268, எஸ். மனோகரன்- 5063.

ஹெலன்டேவிட்சன், பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோரைத் தவிர மற்ற 20 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.

வாக்கு எண்ணிக்கையின் முடிவில், கன்னியாகுமரி தொகுதியில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை ஹெலன்டேவிட்சனிடம் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திரகுமார் வழங்கினார். மாநில சுற்றுலா மற்றும் பதிவுத் துறை அமைச்சர் என். சுரேஷ்ராஜன் உடனிருந்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin