
கம்ப்யூட்டரின் முதுகுத் தண்டாக இருந்து அனைத்து வேலைகளுக்கும் தேவையான செட்டிங்ஸை வழங்கி செயல்படுத்துவது விண்டோஸ் இயக்கத்தின் ரெஜிஸ்ட்ரியாகும். இதில் மாற்றங்களை ஏற்படுத்துகையில் கவனமாக இருக்க வேண்டும். சரியாக மாற்றங்களை ஏற்படுத்தாவிட்டால் கம்ப்யூட்டரில் ஏதேனும் ஒரு புரோகிராம் இயங்குவதில் பிரச்சினை ஏற்படலாம். அல்லது மொத்தமாகவே இயங்குவதில் சிக்கல்கள் உருவாகலாம்
இதற்காகவே இதில் மாற்றங்களை ஏற்படுத்தும் முன் ரெஜிஸ்ட்ரியை பேக் அப் எடுத்து வைத்துக் கொள்வது நல்லது. அப்போது தான் சரியாக மாற்றங்களை ஏற்படுத்தாவிட்டால் இவ்வாறு சேவ் செய்த பேக் அப் பைலை பயன்படுத்திக் கொள்ளலாம். இங்கு எவ்வாறு பேக் அப் செய்வது என்பதனையும் அதனை எப்படி மீண்டும் பயன்படுத்துவது என்பதனையும் காணலாம்.
விண்டோஸ் 98 மற்றும் ME ஆப்பரேட்டிங் சிஸ்டங்களைப் யன்படுத்துவோருக்கு
Start /Run சென்று அங்கு கிடைக்கும் பாக்ஸில் regedit என டைப் செய்திடவும். அடுத்ததாக Registry மெனு செல்லவும். அடுத்து Export Registry File என்பதில் கிளிக் செய்திடவும். அடுத்து கிடைக்கும் பாக்ஸில் இதனை சேவ் செய்திட ஒரு இடம் தேர்ந்தெடுத்து அதில் இந்த பைலுக்கு ஒரு பெயர் கொடுக்கவும்.
நான் Regbackup_04052009 எனக் கொடுப்பேன். அப்போதுதான் எந்த தேதியன்று இந்த ரெஜிஸ்ட்ரி சேவ் ஆனது என்று தெரியும். அவ்வளவுதான்! ரெஜிஸ்ட்ரி பைல் பேக் அப் ஆகிவிட்டது.
எக்ஸ்பி பயன்படுத்துவோருக்கு
Start /Run சென்று அங்கு கிடைக்கும் பாக்ஸில் regedit என டைப் செய்திடவும். அடுத்து File மெனு கிளிக் செய்து கிடைக்கும் பிரிவுகளில் Export என்பதில் கிளிக் செய்திடவும். அடுத்து கிடைக்கும் பாக்ஸில் இதனை சேவ் செய்திட ஒரு இடம் தேர்ந்தெடுத்து அதில் இந்த பைலுக்கு ஒரு பெயர் கொடுக்கவும். ஏற்கனவே சென்ற பாராவில் இதற்கு எப்படி பெயர் வைக்கலாம் என்று நான் குறிப்பிட்டிருப்பதனை மனதில் கொள்ளவும். இந்த இடத்தில் உங்கள் கவனத்திற்கு ஒரு தகவல். கம்ப்யூட்டரைப் பயன்படுத்தி அதனை மூடுகையில் ஒவ்வொரு முறையும் Windows is saving your settings என்று வருகிறது அல்லவா! அப்போது விண்டோஸ் ரெஜிஸ்ட்ரி பைலை சேவ் செய்கிறது. இருப்பினும் நாமும் சேவ் செய்வது நமக்கு நல்லது
சரி, ரெஜிஸ்ட்ரியை சேவ் செய்துவிட்டோம். பிரச்சினை ஏற்பட்டது என்றால் எப்படி இதனை மீண்டும் இயக்கத்திற்குக் கொண்டுவருவது என்று பார்க்கலாம்
முதலாவதாக விண்டோஸ் உங்கள் ரெஜிஸ்ட்ரியை லோட் செய்கையில் அதில் ஏதேனும் ஒரு பிரச்சினைக்குரிய கோடிங்கை கண்டு கொண்டால் தானாகவே அது தான் கடைசியாக பேக்கப் செய்த ரெஜிஸ்ட்ரியை செயல்பாட்டிற்குக் கொண்டு வரும். ஆனால நீங்களாக ரெஜிஸ்ட்ரியுடன் விளையாண்டு அது சரியாக அமைக்கப்படாமல் சிக்கல் ஏற்பட்டது என்றால் நீங்கள் தான் சரி செய்திட வேண்டும்
Registry Editor Registry மெனுவில் கிளிக் செய்திடுங்கள். அடுத்து உங்கள் பேக் அப் பைலைச் சுட்டிக் காட்டுங்கள். அதன் பின் Import Registry என்பதில் கிளிக் செய்திடுங்கள். மீண்டும் கம்ப்யூட்டரை பூட் செய்திடுங்கள். சரியாகிவிடும்.



நீங்கள் அந்த புரோகிராமில் எந்த எந்த பைல்களை எல்லாம் தானாக பேக் அப் செய்திட வேண்டும் என ஒரு பட்டியல் தயாரித்து வைத்திருப்பீர்கள் அல்லவா? அதில் இதற்கான இரண்டு பைல்களையும் சேர்த்துவிடுங்கள். சேர்க்க வேண்டிய பைல்களின் பெயர்கள்: "User.dat" மற்றும் "System.dat"
தகவல் : S.M.S. ஹமீது, துபாய்
குறிப்பு : WINDOW BACKUP பற்றிய உங்கள் சந்தேகம் இருந்தால் nellai_thalai@yahoo.com இந்த ஈமெயில் தொடர்பு கொள்ளலாம் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக