தொகுதி மறுசீரமைப்பிற்கு பிறகு தூத்துக்குடி மக்களவைத் தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் விளாத்திகுளம், தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகள் அடங்கியுள்ளன.
இந்த தொகுதிகளில் தற்போது திருச்செந்தூர், கோவில்பட்டி, ஒட்டப்பிடாரம், விளாத்திகுளம் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகள் அ.இ.அ.தி.மு.க. வசம் உள்ளது.
தூத்துக்குடி சட்டப்பேரவை தொகுதி தி.மு.க.விடமும், ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவை தொகுதி காங்கிரசிடம் உள்ளது.
இந்த தொகுதி மக்களின் மனதில் ஆட்சியாளர்களின் மீது உள்ள கோபம் என்றவென்றால் மின்வெட்டு, விலைவாசி உயர்வுதான்.
கூலி வேலைக்கு செல்லும் நாங்கள் தினமும் தினம் கிடைக்கும் பணத்தை கொண்டுதான் சமையல் பொருட்களை வாங்க வேண்டியுள்ளது. அதுவும் நாங்க கொண்டு போகிற காசை விட அதிகமாக ஆகிவிடுகிறது. இதனால் கடையில கடன் சொல்லித்தான் வருகிறோம். கருணாநிதி இந்த விலைவாசி உயர்வை குறைச்சா நல்லா இருக்கும்” என்று தொகுதி மக்கள் கூறுகின்றனர்.
இலவச டி.வி., ஒரு ரூபாய்க்கு அரிசி கொடுத்தாலும் ஒரு பக்கம் ஆளும்கட்சிக்கு எதிரான அலையே வீசுகிறது.
இலங்கை தமிழர்கள் பிரச்சனை பற்றி கேட்டால் இலங்கை பிரச்சனையா...... என்கிறார்கள். சிலர் பாவம் என்கிறார்கள். ஆனால் இது தேர்தலில் ஆளும்கட்சியினருக்கு எதிராக எந்த அளவிற்கு எதிரொலிக்கும் என்று கூறமுடியாது.
வருடத்துக்கு 100 நாள் வேலை திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. ஆனால் இந்த திட்டத்தை கருணாநிதிதான் கொண்டு வந்துள்ளார் என்று மக்கள் கூறுகின்றனர்.
ஒரு நாளைக்கு ரூ.80 வீதம் நூறு நாளைக்கு ரூ.8,000 கிடைத்துள்ளது. இதனால் தி.மு.க.வுக்கு ஓட்டு போடலாம் என்று சிலர் கூறுகின்றனர்.
கட்சி சார்பில் எந்த வேட்பாளர்கள் போட்டியிடுகின்றார்கள் என்று கூட கிராமப்புற மக்களுக்கு தெரியவில்லை. அ.இ.அ.தி.மு.க., தி.மு.க. மாறி மாறி நிற்கும் என்று சொல்கிறார்கள்
தொகுதியை பொறுத்தவரை தி.மு.க.வினர் பிரசாரத்தில் மந்தநிலையே காணப்படுகிறது. தி.மு.க.வினர் பிரசாரத்துக்கு வருவது அரிது என்கிறார்கள் தொகுதி மக்கள். அ.இ.அ.தி.மு.க.வினர்தான் தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்து வருகின்றனர்.
தகவல் : வெப்துனியா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக