சனி, 16 மே, 2009

தேர்தல் முடிவு வெற்றி விபரம்

சென்னை: தமிழகத்தி்ல் போட்டியிட்ட 21 தொகுதிகளில் 17 இடங்களில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது திமுக.

பல இடங்களில் தேமுதிக வேட்பாளர்கள் அதிமுக கூட்டணியின் வாக்குகளை பெருமளவில் பிரித்ததால் திமுகவின் வெற்றி எளிதாகிவிட்டதாகக் கருதப்படுகிறது.

திமுக வென்ற இடங்கள்:

1. அழகிரி 1.4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி:

மதுரை தொகுதியில் போட்டியிட்ட திமுகவின் மு.க.அழகிரி 1 லட்சத்து 40 ஆயிரத்து 985 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

திமுக கூட்டணியிலேயே அதிகபட்ச வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளவர் அழகிரிதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தொகுதியில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தற்போதைய எம்.பியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பி.மோகனை 1 லட்சத்து 40 ஆயிரத்து 985 வாக்குள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளார் அழகிரி.

இந்தத் தொகுதியை சிபிஎம்மின் மோகனிடமிருந்து கைப்பற்றியுள்ளது திமுக.

முதல் முறையாக தேர்தல் களத்தை வேட்பாளராக சந்தித்த மு.க.அழகிரி லட்சத்திற்கும அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளார்.

அழகிரியின் வெற்றியை மதுரை முழுவதும், அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தடபுடலாக கொண்டாடி வருகின்றனர்.

மொத்த வாக்குகள்: 10,21,055
பதிவானவை: 7,91,679
அழகிரி(திமுக) - 4,31,295
மோகன்(சிபிஎம்) - 2,90,310
கவியரசு(தேமுதிக) - 54,419

2. தர்மபுரியில் தாமரைச்செல்வன் வெற்றி:

தர்மபுரி தொகுதியில் திமுக வேட்பாளர் தாமரைச்செல்வன் வெற்றி பெற்றுள்ளார்.

தற்போதைய எம்.பியான டாக்டர் செந்தில் பாமக சார்பிலும், திமுக சார்பில் தாமரைச்செல்வனும் போட்டியிட்டனர்.

இந்தப் போட்டியில் தாமரைச்செல்வன் 1 லட்சத்து 35 ஆயிரத்து 942 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார்.

வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள்

தாமரைச்செல்வன் (திமுக) - 3,65,812.
டாக்டர் செந்தில் (பாமக) - 2,29,870.

3. கன்னியாகுமரி ஹெலன் வெற்றி:

கடும் போட்டிக்கு மத்தியில் கன்னியாகுமரி தொகுதியை வென்றுள்ளது திமுக.

முன்பு நாகர்கோவில் என அழைக்கப்பட்ட கன்னியாகுமரி தொகுதியில் திமுக சார்பில் ஹெலன் டேவிட்சனும், சிபிஎம் சார்பில் தற்போதைய எம்.பி. பெல்லார்மின், பாஜக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், தேமுதிக சார்பில் ஆஸ்டின் ஆகியோர் போட்டியிட்டனர்.

கடும் போட்டி நிலவிய இந்தத் தொகுதியில், இறுதியில் திமுக வேட்பாளர் ஹெலன், 65 ஆயிரத்து 687 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொகுதியை சிபிஎம்மிடமிருந்து திமுக சார்பில் கைப்பற்றியுள்ளார்.

மொத்த வாக்குகள்: 11,78,047
பதிவானவை: 7,65,663
ஹெலன் டேவிட்சன் (திமுக)- 3,20,161
பொன்.ராதாகிருஷ்ணன் (பாஜக)-2,54,474
பெல்லார்மின் (சிபிஎம்)-85,583
எஸ்.ஆஸ்டின் (தேமுதிக)- 68,472
சிவகாமி(பகுஜன் சமாஜ்)- 6,400

4. அரக்கோணம்-இழுபறிக்குப் பின் வென்ற திமுக:

அரக்கோணம் தொகுதியில் இழுபறிக்குப் பின் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் வென்றார்.

அரக்கோணம் தொகுதியில் முன்னாள் மத்திய ரயில்வே இணை அமைச்சர் ஆர்.வேலுவும், திமுக சார்பில் ஜெகத்ரட்சகனும் போட்டியிட்டனர்.

வாக்குகள் எண்ணி முடித்தபோது, ஜெகத்ரட்சகன் 4,11,453 வாக்குகளையும், வேலு, 3,03,630 வாக்குகளைப் பெற்றிருந்தனர்.

இந்த நிலையில், நேற்று மறு வாக்குப் பதிவு நடந்த மேல் வல்லம் வாக்குச் சாவடிக்குட்பட்ட வாக்குகளை எண்ணுவது தொடர்பாக குழப்பம் ஏற்பட்டதால் தேர்தல் ஆணையத்தின் ஆலோசனையை கோரினர். இதையடுத்து அங்கு முடிவை அறிவிப்பது நிறுத்தி வைக்கப்பட்டது.

தேர்தல் ஆணைய ஆலோசனைக்குப் பின்னர் மறு வாக்குப் பதிவு நடந்த வாக்குச் சாவடியில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டன.

இதன் இறுதியில், ஜெகத்ரட்சகன் 4,15,041 வாக்குகளும், வேலு, 3,05,245 வாக்குகளும் பெற்றிருந்தனர். இதையடுத்து 1 லட்சத்து 9 ஆயிரத்து 796 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெகத்ரட்சகன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

5. நாகப்பட்டிணம்-விஜயன் வெற்றி:

நாகப்பட்டிணம் தொகுதியில் திமுக வேட்பாளர் விஜயன் 47 ஆயிரத்து 962 வாக்கு வித்தியாசத்தில் வென்றார்.

நாகப்பட்டிணம் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் விஜயன் 3 லட்சத்து 69 ஆயிரத்து 915 வாக்குகள் பெற்றார். இது இரண்டாவது இடத்தை பிடித்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் 3 லட்சத்து 21 ஆயிரத்து 953 வாக்குகள் அதிகமாகும்.

மூன்றாவது இடத்தை பிடித்த் தேமுதிக வேட்பாளர் 51 ஆயிரத்து 376 வாக்குகள் பெற்றுள்ளார். இது திமுக வேட்பாளரின் வெற்றி வித்தியாசத்தை விட சுமார் 3 ஆயிரத்து 414 வாக்குகள் அதிகமாகும்.

6. நாமக்கல்லில் திமுக வெற்றி:

நாமக்கல் தொகுதியில் ஆரம்பத்தில் முன்னணியில் இருந்து வந்த அதிமுக கடைசியில் தோல்வியைத் தழுவியது.

நாமக்கல் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் காந்தி செல்வன், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் வைரம் தமிழரசியை, 1 லட்சத்து 2 ஆயிரத்து 112 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

புதிதாக உருவாக்கப்பட்ட நாமக்கல் தொகுதியின் முதல் உறுப்பினராகியுள்ளார் காந்தி செல்வன்.

7. நீலகிரியை வென்றார் ராசா:

நீலகிரி தனி தொகுதியில் போட்டியிட்ட மத்திய அமைச்சர் ராசா அங்கு 86 ஆயிரத்து 021 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

கடந்த முறை பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்டிருந்த ராசா இம்முறை நீலகிரிக்கு மாறிப் போட்டியிட்டார். அவரை எதிர்த்து பொள்ளாச்சி தொகுதி எம்.பியாக இருந்து வந்த மதிமுகவின் சி.கிருஷ்ணன் போட்டியிட்டார்.

வாக்கு எண்ணிக்கையில் இடையில் கிருஷ்ணன் சில சுற்றில் முன்னிலை வகுத்தார். இருப்பினும் இறுதியில், ராசா, வெற்றி பெற்றார்.

மொத்த வாக்குகள்: 10,01,247
பதிவானவை: 7,09451
ஆர் ராஜா (திமுக)- 3,16,802
டாக்டர் கிருஷ்ணன் (மதிமுக)-2,30,781
செல்வராஜ் (தேமுதிக)-76,610
பத்ரன் (கொமுப)- 32,779
குருமூர்த்தி (பாஜக)- 18,690

8. தயாநிதி 33,454 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மத்திய சென்னையில் 33 ஆயிரத்து 454 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

மத்திய சென்னையில் பதிவான வாக்குகள் விவரம்


தயாநிதி மாறன்(திமுக)- 2,85,783
முகமது அலி ஜின்னா(அதிமுக)- 2,52,329
ராமகிருஷ்ணன்(தேமுதிக)- 38,959
ஹைதர் அலி (மனித நேய மக்கள் கட்சி)-13,160

9. ஸ்ரீபெரும்புதூர்- டி.ஆர்.பாலு வெற்றி:

பெரும் போராட்டத்திற்குப் பின்னர் முதல் முறையாகப் போட்டியிட்ட ஸ்ரீபெரும்புதூரில் வெற்றி பெற்றுள்ளார் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு.

தென் சென்னை தொகுதியிலிருந்து முதல் முறையாக ஸ்ரீபெரும்புதூருக்கு மாறி வந்து போட்டியிட்டார் பாலு. அவரை எதிர்த்து வலுவான வேட்பாளராக பாமக சார்பில் ஏ.கே.மூர்த்தி நிறுத்தப்பட்டார்.

இதனால் போட்டி கடுமையாக இருந்தது. ஆரம்பத்திலிருந்தே மூர்த்தியும், பாலுவும் மாறி மாறி முன்னணியில் இருந்து வந்தனர். ஒரு கட்டத்தில் பாலு தோல்வி அடைந்து விடக் கூடிய அளவுக்கு நிலைமை இருந்தது.

இந்த நிலையில் கடைசிக் கட்ட சுற்றுக்குளில் வேகமாக முன்னேறி விட்டார் பாலு.

இறுதியில், 25 ஆயிரத்து 544 வாக்குகள் வித்தியாசத்தில் டி.ஆர்.பாலு வெற்றி பெற்றார்.

10. தஞ்சை- பழனிமாணிக்கம் வெற்றி:

தஞ்சாவூர் தொகுதியில் மீண்டும் வெற்றி பெற்று தொகுதியை தக்க வைத்துக் கொண்டார் மத்திய அமைச்சர் பழனி மாணிக்கம்.

தஞ்சையில் போட்டியிட்ட நடப்பு எம்.பியான பழனி மாணிக்கம், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட மதிமுகவின் துரை பாலகிருஷ்ணனை 1 லட்சத்து 500 வாக்குகள் வித்தியாசத்தில் வீ்ழ்த்தினார்.

தஞ்சையில் பழனி மாணிக்கம் வெல்வது இது 5வது முறையாகும்.

வேட்பாளர்கள் வாக்கு விபரம்:

மொத்த வாக்குகள்: 10,53,083
பதிவானவை: 8,07,786
பழனிமாணிக்கம் (திமுக) - 4,08,343
துரை பாலகிருஷ்ணன் (மதிமுக) - 3,06,556
ப.ராமநாதன் (தேமுதிக) -63,852

11. திருவண்ணாமலை-காடுவெட்டி குரு படுதோல்வி:

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாமகவின் காடுவெட்டி குரு, திருவண்ணாமலையில் பெரும் தோல்வியைத் தழுவியுள்ளார்.

திருவண்ணாமலையில் காடுவெட்டி குருவை எதிர்த்து, திமுக சார்பில் வேணுகோபால் நிறுத்தப்பட்டார். திமுகவின் மூத்த முன்னோடிகளில் ஒருவர் வேணுகோபால். திருப்பத்தூர் தொகுதி எம்.பியாக இருந்தவர்.

காடுவெட்டி குருவின் சவாலை சமாளிக்கும் வகையில் அனுபவம் வாய்ந்த வேணுகோபாலை நிறுத்தியது திமுக.

ஒரு சுற்று கூட விடாமல் வேணுகோபால் தொடர்ந்து முன்னணி வகித்து வந்தார். இறுதியில், ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 690 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார் குரு.

வேணுகோபால் பெற்ற வாக்குகள் - 4,32,302
காடுவெட்டி குரு பெற்ற வாக்குகள் - 2,84,612

12. தூத்துக்குடி- ஜெயதுரை வெற்றி:

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் ஜெயதுரை வெற்றி பெற்றுள்ளார்.

தூத்துக்குடியில், திமுக வின் ஜெயதுரைக்கும், அதிமுகவின் சிந்தியா பாண்டியனும் நேரடிப் போட்டியில் இருந்தனர்.

இதில் ஜெயதுரை 76 ஆயிரத்து 649 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

வேட்பாளர்கள் பெற்ற வாக்கு விவரம்..

மொத்த வாக்குகள்: 9,39,711
பதிவானவை: 6,55,882
ஜெயதுரை (திமுக) - 3,11,017
சிந்தியா பாண்டியன் (அதிமுக) - 2,34,368
எம்.எஸ்.சுந்தர் (தேமுதிக) - 61,403
கராத்தே சரவணன் (சாமக) - 27,013

13. கள்ளக்குறிச்சியில் 'கேப்டன் மச்சான்' தோல்வி:

கள்ளக்குறிச்சி தொகுதியில் திமுகவின் ஆதிசங்கர் 1 லட்சத்து 8 ஆயிரத்து 608 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இத்தொகுதியில் போட்டியிட்ட நடிகர் விஜய டி.ராஜேந்தர் 8,211 வாக்குகளே பெற்று டெபாசிட்டை இழந்தார்.

கள்ளக்குறிச்சியில் பதிவான வாக்குகள் விவரம்..

மொத்த வாக்குகள்-11,05,606
பதிவானவை - 8,54,955
ஆதிசங்கர்(திமுக.)-3,63,601
தன்ராஜ்(பாமக.)-2,55,993
விஜய்காந்தின் மச்சான் சுதீஷ் (தேமுதிக.)-1,32,223
விஜய டி. ராஜேந்தர்(லட்சிய திமுக.)-8,211

14. ராமநாதபுரத்தில் நடிகர் ரித்தீஷ் வெற்றி:

ராமநாதபுரம் தொகுதியில் நடிகர் ஜே.கே.ரித்தீஷ் திமுக சார்பில் போட்டியிட்டு வென்றுள்ளார்.

தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் அமைச்சரான அதிமுகவின் சத்தியமூர்த்தியை 69 ஆயிரத்து 915 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார் ரித்தீஷ்.

வாக்குள் விவரம்..

மொத்த வாக்குகள்: 11,30,489
பதிவானவை: 7,77,839
சிவகுமார் என்ற ஜெ.கே.ரித்திஷ்(திமுக.)- 2,94,945
சத்தியமூர்த்தி(அதிமுக.)- 2,25,030
திருநாவுக்கரசர்(பா.ஜ.க)- 1,28,322
சிங்கை ஜின்னா(தே.மு.தி.க.)- 49,571

15. பெரம்பலூரில் நெப்போலியன் வெற்றி:

பெரம்பலூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட நடிகர் நெப்போலியன் வெற்றி பெற்றுள்ளார்.

பெரம்பலூர் தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பாலசுப்ரமணியன் போட்டியிட்டார்.

இதில், நெப்போலியனுக்கு 3,98,742 வாக்குகளும், பாலசுப்ரமணியன் 3,21,138 வாக்குகளும் பெற்றனர்.

77,604 வாக்குகள் வித்தியாசத்தில் நெப்போலியன் வெற்றி பெற்றார்.

16. வட சென்னையில் தா.பண்டியன் தோல்வி:

வட சென்னை தொகுதியில் சிபிஐ மாநிலச் செயலாளர் தா.பாண்டியனை வீழ்த்தியுள்ளார் திமுகவின் டி.கே.எஸ். இளங்கோவன்.

ஆரம்பத்திலிருந்தே இளங்கோவன் தொடர்ந்து முன்னணியில் இருந்து வந்தார்.

இறுதியில், 19 ஆயிரத்து 153 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் இளங்கோவன்.

வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள்

டி.கே.எஸ். இளங்கோவன் - 2,81,055
தா.பாண்டியன் - 2,61,902.

17. கிருஷ்ணகிரியில் சுகவனம் வெற்றி:

கிருஷ்ணகிரி தொகுதியில் திமுகவின் இ.ஜி. சுகவனம் வெற்றி பெற்றார்.

பர்கூர் சட்டமன்றத் தொகுதியில் முன்பு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவையே தோற்கடித்துக் காட்டிய சுகவனம், இம்முறை 76 ஆயிரத்து 598 வாக்குகள் வித்தியாசத்தி்ல் அதிமுக வேட்பாளர் நஞ்சே கவுடுவை தோற்கடித்தார்.

சுகவனம் பெற்ற வாக்குகள் - 3,35,977
நஞ்சே கவுடு பெற்ற வாக்குகள் - 2,59,379.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin