நாம் உணர்வது என்ன?* உலகச்சந்தை சரிவில் இருக்கிறது.
தினமும் வேலை இழப்பை பற்றி செய்திகளை படிக்கின்றோம்.
சில நண்பர்களுக்கு வேலை இழப்பு ஏற்ப்படதையும் அறிகிறோம்
இன்னும் 24 மாதத்திற்கு இந்த நிலை இருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது.
ஆங்காங்கே, சில நிறுவனங்கள் மூடப்படுகின்றன.
நிறுவனங்களின் லாபம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
நமது தேவை என்ன?
1. தற்ப்போது செய்து கொண்டிருக்கும் வேலையை தக்கவைக்க வேண்டும்.
2. மாதாமாதம் 'வாங்கிய' கடனை திருப்பி செலுத்த வேண்டும்.
3. நம்மை நம்பி இருக்கும் குடும்பத்தை பேண வேண்டும்.
4.இவற்றை தடையின்றி செய்யலாம் என்ற பாதுக்கப்பு உணர்வு வேண்டும்!.
செய்யக்கூடியான சில
1.தேவையற்ற விடுப்பு எடுப்பதை தவிர்கவும்.
2. பயணம் மேற்கொள்ளவும், இடம் மாறுதல் செய்யவும் தயாராக இருக்கவும்.
3.சம்பள உயர்வை எதிர்நோக்க வேண்டாம்.# சிரமம் பாராமல் கொடுத்த பணியை முடித்து கொடுக்கவும்.
4.புதிய நிறுவனங்களுக்கு செல்ல, அவசியம் இன்றி முயல வேண்டாம்.
5. புதிய தொழில் நுணுக்கங்களை தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டவேண்டும்.
6. முடிந்த வரை உறப்பத்தியை பெருக்கி வேலைகளை துரிதாமாக செய்துநிறுவனம் லாபம் ஈட்ட உதவ வேண்டும்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:
1. இது, பல நெருக்கடிகளில் இருந்து காக்கும்.
2 குறிப்பாக கடன் அட்டைகள் மூலம் வாங்கிய கடனை அடைக்கவும்.
3.அது போல் மாத சந்தாக்கள் ('E.M.I') அனைத்தையும் அடைக்க முயலவும்.
4.நீங்கள் இருக்கும் வீடு வாடகை அதிகமானதாகவும் தேவைக்குமேல்பெரிதாகவும் இருந்தால் வேறு குறைந்த வாடகை வீடு பார்க்கவும்.
5. உங்கள் மாத செலவுகளை பட்டியலிடவும்.$ தேவையானது, அனாவசியமானது என்று பட்டியலை பிரித்துக் கொள்ளவும்.
6. அனாவசியமானதை பட்டியலிலிருந்து நீக்கிவிடவும்.
7.அடிக்கடி வெளியில்('Restaurants') உண்பதை தவிர்க்கவும்.
8. மேலும் என்னென்ன வழிகளில் பணம் விரயமாகுமோ அனைத்தையும் தவிர்க்கவும்.
(Better to India)தயாராக இருங்கள்:
1.இனி ஒரு வேளை பணி இழப்பு ஏற்ப்பட்டால் சந்திக்க, செய்யவேண்டியன.
2. இயன்ற வரை - வேறு துறைகளில் செயல்படும் ஆற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
3.தந்தை, சுய தொழில் செய்பவராக இருந்தால், அந்த தொழிலில் ஈடுபடும் மனநிலையை வளர்த்துகொள்வது நல்லது.
4.நண்பர்கள் வேறு தொழில் செய்பவர்களாக இருந்தால், அவர்களுடன் கலந்து அந்த தொழிலில் ஈடுபட்டு வருமானத்தை ஓரளவு தடையில்லாமல் பார்த்துக்கொள்ளலாம்.
5. இந்த சந்தர்ப்பத்தை ஒரு தொய்வாக எடுத்துகொள்ளாமல், நமக்கு பிடித்த துறைகளில் ஈடு பட கிடைத்த வாய்ப்பாக எண்ணி, முயற்சி செய்யலாம்.
(என்னை கேட்டால் விவசாயத்துறையில் ஈடு பட விருப்பம்!" உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்தொழுதுண்டு பின்செல் பவர்." நினைவிற்கு வருகிறது... )
நன்றி : நியாஸ், K.S.A
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக