ஞாயிறு, 8 பிப்ரவரி, 2009

திருச்செந்தூர் - சென்னை செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் தொடக்கம்

திருநெல்வேலி: திருச்செந்தூரிலிருந்து சென்னைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலான செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலை மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் இன்று கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

இன்று பிற்பகல் திருச்செந்தூரில் நடந்த தொடக்க விழாவில் லாலு பிரசாத் யாதவ் கலந்து கொண்டு பச்சைக் கொடி காட்டி ரயிலை இயக்கி வைத்தார்.

முன்னதாக லாலு பிரசாத் யாதவ் சிறப்பு விமானம் மூலம் தூத்துக்குடி வந்து, அங்கிருந்து காரில் திருச்செந்தூருக்கு வந்தடைந்தார். நிகழ்ச்சிக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் ராதிகா செல்வி தலைமை வகித்தார்.புதிதாக துவக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில், இன்று மட்டும் பிற்பகலில் புறப்பட்டு சென்னைக்கு செல்கிறது.

இதன் பிறகு வாரந்தோறும் வியாக்கிழமை இரவு 7.15க்கு திருச்செந்தூரில் (வ.எண் 6536) புறப்பட்டு மறுநாள் காலை 9.20க்கு சென்னை எழும்பூர் செல்லும்.அதேபோல் மறு மார்க்கத்தில், சென்னை எழும்பூரிலிருந்து (வ.எண் 6535) வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மாலை 3.40க்கு புறப்பட்டு மறுநாள் காலை நெல்லைக்கு 3.40க்கு வந்து திருச்செந்தூருக்கு 6.45க்கு வந்து சேரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin